Thursday, 6 April 2017

அருள்மிகு வைத்தியநாதசுவாமி திருக்கோயில், வைத்தீஸ்வரன் கோயில் - நாகப்பட்டினம்

மூலவர் : வைத்தியநாதர்

அம்மன்/தாயார் :  தையல்நாயகி

தல விருட்சம் :  வேம்பு

தீர்த்தம் : சித்தாமிர்தம்

ஆகமம்/பூஜை : காமிக ஆகமம்

பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன்

புராண பெயர் : புள்ளிருக்குவேளூர்

ஊர் : வைத்தீஸ்வரன் கோயில்
 
தேவார பாடல் பாடியவர்கள்:  திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர்.

பிற பாடல் பாடியவர்கள்:

அருணகிரிநாதர் (14 திருப்புகழ் பாடல்கள்), குமர குருபரர், படிக்காசு தம்பிரான், சிதம்பர முனிவர்,காளமேகப் புலவர், ராமலிங்க அடிகள், வடுகநாத தேசிகர், தருமையாதீனம் முதலனோர்..
   

 தேவாரப்பதிகம்:

கீதத்தை மிகப்பாடும் அடியார்கள் குடியாகப் பாதத்தை தொழநின்ற பரஞ்சோதி பயிலுமிடம் வேதத்தின் மந்திரத்தால் வெண்மணலே சிவமாகப் போதத்தால் வழிபட்டான் புள்ளிருக்கு வேளூரே. - திருஞானசம்பந்தர்

தேவாரப்பாடல் பெற்ற காவிரி வடகரைத் தலங்களில் இது 16வது தலம்.

 திருவிழா:
   
கந்தசஷ்டித் திருவிழா,

செவ்வாய்க்கிழமை தோறும் மாலையில் ஆட்டுக்கிடா வாகனத்தில் அங்காரகன் எழுந்தருளுவார்,

ஆடிப்பூரம்,

 நவராத்திரி,

கிருத்திகை,

முத்துக்குமாசுவாமிக்கு தைமாதம் செவ்வாய்கிழமை ஆரம்பித்து 10 நாள் விழா நடக்கும்.

பங்குனியில் கோயிலின் பிரமோற்ஸவம் 28 நாள் பெருவிழா.
   

தல சிறப்பு:
   
  இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

 பார்த்தால் அசரவைக்ககூடிய பிரம்மாண்டமான கோவில்.

 தலத்தில் உறைகின்ற சிவனாருக்கு, வைத்தியநாதர் என்று பெயர். நோயால் அவதிப்பட்டு, தன்னிடம் அடைக்கலமாக வரும் பக்தர்களுக்கு வைத்தியம் பார்க்கும் வைத்தியர் ஆவார் !

இங்குள்ள 5 கோபுரங்களும் ஒரே நேர்கோட்டில் அமைந்துள்ளன.

இங்குள்ள மரகதலிங்கம் புகழ்பெற்றது.

 மூலவருக்கு முன் தங்கம், வெள்ளியால் ஆன இரண்டு கொடிமரங்கள் உள்ளன.

பொதுவாக நவக்கிரகங்கள் திசை மாறி இருக்கும். ஆனால் இங்கு நவக்கிரகங்கள் அனைத்தும் சிவன் சன்னதிக்கு பின்புறம், ஒரே நேர்கோட்டில் நின்று வைத்தியநாதருக்கு அடங்கி, கிரக பலனை பக்தர்களுக்கு சாதகமாக்கி நோய் மற்றும் தோஷங்களை நீக்குவதாக நம்பிக்கை. மற்ற கோயில்களில் நவக்கிரக சன்னதி சிவன் சன்னதியின் முன்பக்கமாகவே அமைக்கப்பட்டிருக்கும். இங்கு மட்டுமே பின்பக்கம் உள்ளது.

அங்காரகன்(செவ்வாய்) பகவான் இங்கு தனி சன்னதியில் அருள்பாலிக்கிறார்.

தன்வந்திரி சித்தர் ஜீவசமாதி அடைந்த ஸ்தலம்.

மகாலட்சுமிக்கு சன்னதி உள்ளது.

முருகப்பெருமான் இறைவனை வழிபட்டு சூரனை அழிக்க வேல் வாங்கிய தலம்.

 செல்வ முத்துக் குமாரராக இத்தலத்தில் முருகன் தன் தகப்பனாரைப் பூஜிக்கிறார்.

 செவ்வாய்க் கிழமைகளில் ஆடு வாகனத்தில் அங்காரகன் எழுந்தருள்வார்.

இராமர் வழிபட்டு அருள் நலமுற்ற தலம்.

இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது.

 இங்கு மொத்தம் ஐந்து சந்நிதிகள் உள்ளன.

1. கற்பக விநாயகர். இவரை வழிபட்டால் என்ன வரம் கேட்டாலும் தருவார்.

2. செவ்வாய் தோசம் உள்ளவர்கள் அங்காரகனை வழிபட்டால் திருமண வரம் கிடைக்கப் பெறுவர் .

3. வைத்தியநாதசுவாமி சர்வ ரோக நிவாரணி.இவரை வணங்கினால் தீராத பிணிகள் எல்லாம் தீரும்.

4. செல்வ முத்துக் குமரர் என்ற முருகப்பெருமானை வணங்கினால் புத்திர பாக்கியம் தொழில் விருத்தி கிடைக்கும்.

5.தையல் நாயகி அம்பாளை வணங்கினால் குழந்தைகளுக்கு பாலா தோசம் என்ற குறை நீங்கும்.
சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 16 வது தேவாரத்தலம் ஆகும்.
   
திறக்கும் நேரம்:
   
 காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8:30 மணி வரை திறந்திருக்கும்.

பூஜை விவரம் :

ஆறு கால பூஜை, அர்த்தசாம பூஜையின் போது செல்வ முத்துக்குமார சுவாமிக்கு  சிறப்பு வழிபாடு நடைபெறும்.  இதனைப் புனுகு காப்பு தரிசனம் என்பர்.

 பொது தகவல்:

 இத்தல இறைவனை வணங்குவோர் அங்காரக தோஷம் நீங்கப்பெறுவர்.

இத்தலத் தீர்த்தமான சித்தாமிர்தகுளம் நோய் நீக்கும் ஆற்றல் உடையது.

நேத்திரப்பிடி சந்தனம், திருச்சாந்துருண்டை பிரசாதம் தருகிறார்கள். இதனை உண்பதால் எல்லாவிதமான நோய்களும் நீங்கும்.

பிறவிப்பிணி வைத்தியராகிய வைத்தியநாதப் பெருமான், தையல் நாயகி திருக்கரத்தில் தைலபாத்திரமும், அமிர்தசஞ்சீவியும், வில்வத்தடி மண்ணும் எடுத்துக்கொண்டு உடன் 4448 வியாதிகளையும் தீர்க்கின்ற இடம்.

இத்தலம் திருக்கயிலாய பரம்பரை தருமபுர ஆதீனத்திற்கு சொந்தமானது ஆதீனத்தின் அருளாட்சிக்குட்பட்டது.

கோயிலின் கிழக்கே பைரவர், மேற்கே வீரபத்திரர், தெற்கே விநாயகர், வடக்கே காளி ஆகியோர் இத்தலத்திற்கு காவல் புரிகின்றனர்.

 5 பிரகாரங்களைக் கொண்ட இந்தக் கோயில் மேற்கு திசை நோக்கியது. ஏழுநிலை ராஜகோபுரம் உள்ளது.

வைத்தியநாதர் தென்னிந்தியாவின் பல மாநிலங்களில் உள்ள மக்கள் பலருக்கு இத்தலத்து ஈசன் குலதெய்வமாக இருப்பதால் இங்கு பல மாநிலத்து பக்தர்களும் வந்து வழிபடுகின்றனர்.

 பிரார்த்தனை:
   
உடற்பிணி, உடம்பில் கட்டிகள், பருக்கள், வடுக்கள் ஆகியவை நீங்க இத்தலத்தில் பிரார்த்தனை செய்து இங்கு தரும் புனுகு எண்ணெய் வாங்கி பூசிக்கொள்கின்றனர்.

 செல்வமுத்துக்குமாரர் சன்னதியில் அர்த்தசாமபூஜையில் முருகனின் திருவடிகளில் சாத்தப்பெறும் நேத்திரப்படி சந்தனமும் திருநீறும் நோய்கள் தீர்க்க வல்லது. இத்தலத்தில் வீற்றிருக்கும் மூலவர் வைத்தியநாத சுவாமியை வணங்குவோர்களுக்கு துயரம் நீங்கி மனஅமைதி கிடைக்கும். மேலும் வேலை வாய்ப்பு , தொழில் விருத்தி ,உத்தியோக உயர்வு, திருமணவரம், குழந்தை வரம், தோச நிவர்த்தி ஆகியவற்றுக்காகவும் இங்கு பிரார்த்தனை செய்தால் சுவாமி பக்தர்களது வேண்டுதல்களை நிச்சயம் நிறைவேற்றி கொடுப்பார்.

இவரது சன்னதியில் தரப்படும் வைத்தியநாதர் மருந்தை வாங்கி தினமும் சாப்பிட்டு வந்தால் தீராத நோய்கள் பல தீருவதாக கூறுகிறார்கள். செவ்வாய் தோஷத்தால் பாதிப்படைந்தவர்கள் இங்கு வழிபாடு செய்வது சிறப்பு.

நேர்த்திக்கடன்:
   
தையல் நாயகிக்கு புடவை சாத்துதலும், அபிசேகம் செய்தலும், சந்தனகாப்பு சாத்துதலும் பக்தர்களின் முக்கிய நேர்த்திகடன்களாக உள்ளது.

சுவாமிக்கு மா ,மஞ்சள் பொடி, திரவிய பொடி, தைலம், பால், தயிர், விபூதி ,பன்னீர்,இளநீர், பஞ்சாமிர்தம், எலுமிச்சை, தேன், சந்தனம் ஆகியவற்றால் அபிசேகம் செய்யலாம். மொட்டை போடுதல், காது குத்துதல், வயிற்று வலி குணமாக மாவிளக்கு போடுதல், தாலி காணிக்கை, உருவங்கள் காணிக்கை ஆகியவற்றை செய்கின்றனர். அம்பாள் சன்னதியில் உப்பு, மிளகு , கடுகு, வெள்ளி கண்ணுருக்கள் ஆகியவற்றையும் பக்தர்கள் செலுத்துகிறார்கள்.

மேலும் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் படைத்தல் ஆகியவற்றை செய்யலாம். சுவாமிக்கு நைவேத்தியம் செய்து பக்தர்களுக்கு விநியோகிக்கலாம். தவிர வழக்கமான அபிசேக ஆராதனைகளும் செய்யலாம்.
   
தலபெருமை:

   காவிரி ஆற்றின் வடகரைப் பகுதியில் இருக்கும் சைவத்தலங்களில் முக்கியமான தலங்களில் ஒன்று திருப்புள்ளிருக்கு வேளூர். அதன் இன்றையப் பெயர் வைத்தீஸ்வரன் கோவில்.

தினமும் அர்த்த ஜாமத்தில் முருகனுக்கு முத்துகுமார சுவாமிகளுக்கு தீபாராதனை நடக்கும். புனுகு, பச்சை கற்பூரம், சந்தனம், எலுமிச்சை சாத்தி பன்னீர் புஷ்பம், பால் அன்னம், பால் நைவேத்தியம் இரவு 9 மணிக்கு விசேசமாக பூஜை நடத்தி வழிபடுகின்றனர்.

சித்தாமிர்த தீர்த்தம்:

இத்தல இறைவனுக்கு சித்தர்கள் அமிர்தத்தால் அபிஷேகம் செய்து வழிபட்டு பல வரங்கள் பெற்றனர். அப்போது சிந்திய அமிர்தம் இங்குள்ள தீர்த்த குளத்தில் கலந்துள்ளது. எனவே இக்குளம் சித்தாமிர்த தீர்த்தம் எனப்படுகிறது. உடலில் ஏற்படும் அனைத்து வகையான நோய்களுக்கும் இந்த தீர்த்தத்தில் நீராடினால் குணமாகும் என்பது நம்பிக்கை. இதில் 18 தீர்த்தங்கள் கலந்துள்ளன. சதானந்த முனிவர் இங்குள்ள தீர்த்த கரையில் தவம் இருந்த போது, தவளையை பாம்பு விழுங்க முயற்சித்து, இவரது தவத்திற்கு இடையூறு செய்தது. கோபத்தில் இவர் விடுத்த சாபத்தினால் இந்த தீர்த்தத்தில் பாம்பு, தவளை இருப்பதில்லை.

புள்ளிருக்கு வேளூர்:

வைத்தீஸ்வரன் கோயிலுக்கு புள்ளிருக்கு வேளூர் என்ற பெயரும் உண்டு.புள் - சடாயு என்ற பறவையும், இருக்கு - இருக்கு என்ற வேதமும் வேள் - முருகப்பெருமானும், ஊர் - சூரியனும் இறைவனை வழிபட்டு அருள் பெற்ற காரணத்தால் இத்தலப்பெயர் புள்ளிருக்கு வேளூர் என்று பெயர் வந்தது.

நோய் தீர்க்கும் திருச்சாந்து:🅱

இங்கு புற்று மண், அபிஷேக தீர்த்தம், வேப்ப இலை, அபிஷேக சந்தனம், அபிஷேக விபூதி இவைகளை கொண்டு "திருச்சாந்து' எனப்படும் உருண்டை தயாரிக்கப்படுகிறது. இதைச் சாப்பிட்டால் தீராத நோய்கள் குணமாகும் என்பது நம்பிக்கை.

தோல் நோய்களுக்கு, இங்குள்ள புனுகு எண்ணெய் வாங்கி தேய்த்து நீராடுகின்றனர். வைத்தியநாதர் தன்னை வணங்கும் மக்களின் சாதாரண வியாதிகளை மட்டுமின்றி,  பிறவிப்பிணியையே தீர்த்து விடுபவர்.

கோயிலின் கிழக்கேயுள்ள நுழைவிடத்தில், ஆதிவைத்தியநாதர் அருள்பாலிக்கிறார். மேற்கு பார்த்த சிவன் சன்னதியை தரிசித்தால், அது ஆயிரம் கிழக்கு பார்த்த சிவன் சன்னதிகளை தரிசித்த பலனைத்தரும் என்பது ஐதீகம்.  வைத்தியநாதரும் மேற்கு நோக்கி உள்ளார்.

 அங்காரகன்:

சிவபெருமானின் நெற்றிக் கண்ணிலிருந்து தோன்றிய வியர்வையை பூமி தேவி தாங்கிக் கொண்டு, அதனால் உண்டான குழந்தையை வளர்த்துவர, அந்தக் குழந்தை வளர்ந்து சிவனை துதித்து பெரும் தவம் செய்ய, தவத்தினால் தேகம் முழுக்க அக்னியாக, தவத்தில் பெரிதும் மனம் மகிழ்ந்து சிவபெருமான் அவருக்கு, கிரஹ பதவி அளித்தார். கிரஹ பதவி பெற்றவர் அங்காரகன் எனும் செவ்வாய் பகவான். பூமி காரகன் என்றும் பூமி புத்ரன் என்றும் போற்றப்படுபவர். அவரும் அக்னி வர்ணமாகக் காட்சி அளிக்கக் கூடியவர்.

செவ்வாய் தோஷ நிவர்த்தி:

இந்தக் கோயிலிலுள்ள அங்காரகன் சன்னதியில் செவ்வாய் தோஷத்தால் திருமணத்தடை மற்றும் பல சிரமங்களை அனுபவிப்போருக்காக சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுகின்றன. ஒருவரது ஜாதகத்தில் செவ்வாய் திசை 7 வருடம் நடக்கும். நிலம் வாங்க, கடன் தொல்லை நீங்க, மூட்டு வலி குணமாக இவரை வணங்குவது சிறப்பு.

செவ்வாய் தோஷம் நீங்க, முருகன் வழிபாடு, கார்த்திகை மற்றும் செவ்வாய்க்கிழமை விரதம் இருப்பது, துவரை, செப்பு பாத்திரம் ஆகிய பொருள்கள் தானம் செய்வது, அங்காரகனுக்கு அபிஷேகம் செய்து சிவப்பு நிற ஆடை அணிவித்து வழிபாடு செய்வது நல்லது.

சடாயுகுண்டம்:

இத்தலத்தில் சம்பாதி சடாயு என்ற கழுகரசர்கள் இறைவனை வழிபட்டு அருள் பெற்றுள்ளனர். சடாயுவின் வேண்டுகோளின்படி இராமபிரான் இத்தலத்தில் (விபூதி குண்டத்தில்) சிதையடுக்கிச் சாடாயுவின் உடலை வைத்து தகனம் செய்ததனால் இவ்விடம் சடாயு குண்டம் எனப்பட்டது. வீரசேனன் என்ற அரசன் சயரோத்தினால் பீடிக்கப்பெற்ற சித்திர சேனன் என்ற தன் மகனுடன் இத்தலத்திற்கு வந்து நீராடி இக்குண்டத்திற்கு அதிரசம் வடை முதலியன நிவேதனம் செய்து வேதிகையையும் பொன்னால் திருப்பணி செய்து குண்டத்திலுள்ள நீற்றை அள்ளி எடுத்துத் தானும் அணிந்து தன் புதல்வனுக்கும் அணிவித்து நோய் நீங்கப்பெற்று நலமுற்றான்.

செல்வ முத்துக்குமாரர்:

வைத்தியநாதருக்கும் தையல்நாயகிக்கும் செல்லப்பிள்ளையாதலால், இங்குள்ள முருகன் "செல்வ முத்துக்குமாரர்' என அழைக்கப்படுகிறார். சூரபத்மனை அழிப்பதற்காக இத்தல இறைவனை பூஜித்து வரம் பெற்றுள்ளார்.  செல்வமுத்துக்குமாரர் சன்னதியில் தினமும் நடக்கும் அர்த்தஜாம பூஜையின் போது புனுகு, பச்சைக்கற்பூரம், சந்தனம், எலுமிச்சை, பன்னீர், புஷ்பம், பால் சாதம், பால் ஆகியவற்றுடன் விசேஷ பூஜை செய்யப்படும்.

 முருகன் திருவடியில் சாத்தப்படும் சந்தனத்தை வாங்கி சாப்பிட்டால் குழந்தை பாக்கியம் உண்டாகும். முருகனுக்கு முக்கியத்துவம் உள்ள தலம் என்பதால், இங்கு அனைத்து விழாக்களும் முத்துக்குமார சுவாமிக்கு தான். தினமும் காலையிலும், அர்த்தஜாம பூஜையின் போதும் முதலில் முருகனுக்கு பூஜை செய்த பிறகே, சிவனுக்கும் அம்மனுக்கும் பூஜை நடக்கும்.

தல வரலாறு:

நவக்கிரங்களில் ஒருவரான அங்காரகன் வெண் குஷ்ட நோயால் பாதிக்கப்பட்டார். நோய் தீர சிவனைச் சரணடைந்தார். சிவன் அசரீரியாக பூலோகத்திலுள்ள சித்தாமிர்த குளத்தில் நீராடி வழிபட்டால் குணமடையும் என்றார். அந்தக் குளம் வைத்தீஸ்வரன் கோயிலில் இருந்ததை அறிந்த அங்காரகன் அங்கு வந்து நீராடி சிவனை வணங்கினார். சிவன் அவருக்கு திருச்சாந்து என்னும் மருந்து கொடுத்து குணமடையச் செய்தார்.

சிவன் அங்காரகனுக்காக மருந்து தயாரித்தபோது அம்பாள் தைல பாத்திரம் அமிர்த சஞ்சீவி வில்வத்தடி மண் ஆகியவை ஏந்தி நின்றாள். இதனால் தைல நாயகி எனப் பெயர் பெற்றாள். இது மருவி தையல் நாயகி ஆனது.

திருநாவுக்கரசர் தீவிர வயிற்றுப்பிணியினால் அவதியுற்றபொழுது அவர் தமக்கையார் வைத்தியநாதனை நினைந்து பிணிநீக்க தொழுதிட்டார், அவ்வாறே எழுந்தருளி பிணிநீக்கினார். அன்று முதல் இத்தல சிவனாரை அவரின் பக்தகோடிகளால் வைத்தியநாதன் என்றழைக்கபெற்று வழிபடலாயினர்.

 சிறப்பம்சம்: 
   
அதிசயத்தின் அடிப்படையில்:

 இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

 4448 வகையான வியாதிகளை தீர்த்து வைக்கும் மருத்துவத்தின் தலைமை பீடம் இத்தலம்.

 நோயால் அவதிப்பட்டு, தன்னிடம் அடைக்கலமாக வரும் பக்தர்களுக்கு வைத்தியம் பார்க்கும் வைத்தியர் ,  நம்பிக்கையுடன் சிவனை பார்த்து, மனம் உருகப் பிரார்த்தனை செய்தால் போதும். நோய்கள் ஓடிவிடும்.

 தென்னிந்தியாவின் மிகப் புகழ் பெற்ற சிறப்பு வாய்ந்த பிரார்த்தனை தலம்

 இருப்பிடம்:

 நாகை மாவட்டம் மயிலாடுதுறையிலிருந்து (18கி.மீ) சீர்காழி செல்லும் வழியில் வைத்தீஸ்வரன் கோயில் அமைந்துள்ளது.


திருவோண_விரதம்

திருவோணம்நோன்பு_என்பது_திருவோண நட்சத்திரத்தோடு_கூடிய_நன்னாளில் நோற்கும்_நோன்பாகும். இந்த_விரதம் பெருமாளுக்கு_உகந்தது.

ராசி மண்டலத்தில் 27 நட்சத்திரங்கள் உள்ளன. இதில் பெருமாளுக்குரிய திருவோணமும்_சிவனுக்குரிய #திருவாதிரையும் மட்டுமே 'திரு" என்ற சிறப்பு அடைமொழியுடன் கூடியது. தசாவதாரங்களில் வாமன அவதாரம் எடுத்த பெருமாள், மகாபலி சக்கரவர்த்தியிடம் மூன்றடி மண் கேட்ட நிகழ்வு, திருவோண நட்சத்திரத்தன்று தான் நிகழ்ந்ததாக புராணங்கள் தெரிவிக்கின்றன.

சிறப்புகள் :

தோஷங்களில் பலவகையான தோஷங்கள் உள்ளன. அவற்றில் சந்திர தோஷமும் முக்கியமான ஒன்று ஆகும்.

ஜாதகத்தில் சந்திரதோஷம் இருந்தால் அவர்கள் அமாவாசைக்குப் பின்னர் வரக்கூடிய துதியை திதியில் விரதம் இருக்கவேண்டும். விரதம் இருந்த பின்னர் மாலை நேரத்தில் சந்திர தரிசனம் செய்யவேண்டும்.

தெற்கு நோக்கிய அம்பிகையை வழிபடுவதுடன், திருவோண நட்சத்திரமன்று திருவோண விரதம் இருந்தால் சந்திரதோஷம் விலகுவதுடன், சந்தோஷமான வாழ்வு அமையும்.

 எல்லா மாதங்களிலும் வரும் திருவோணம் நட்சத்திரத்தில் பெருமாளை வேண்டி விரதம் இருந்தாலும் ஆவணி திருவோண விரதம் மிக முக்கியமானதாகும்.

திருவோண விரதம் இருக்கும் முறை :

ஒவ்வொரு மாதமும் வரும் திருவோண நட்சதிரத்தன்று அதிகாலையில் தலைக்கு நீராடி, கடவுளைத் துதித்து, பெருமாள் கோவிலுக்குச் சென்று துளசிமாலை அணிவித்து, அல்லது வீட்டில் உள்ள பெருமாளின் படத்திற்கு துளசி கிடைத்தால் அதையோ அல்லது வேறு உகந்த புஷ்பத்தையோ அணிவித்து, மனமார வேண்டிக்கொள்ளவும்.

 பின்னர், அன்று உண்ணப்போகும் உணவுப் பொருள் எதுவாக இருப்பினும், அதில் உப்பு சேர்க்காமல், உண்ண வேண்டும்.

 ஒருவேளை அரிசி உணவும், மற்ற வேளைக்கு, சிற்றுண்டி, பால், பழம் போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம்.

மிகுந்த பக்தியுடன் இந்த விரதத்தை கடைபிடித்தால் வேண்டியது நிறைவேறும் என்பது திண்ணம்.

பலன்கள் :

காலை வழிபாடு - நோய் குணமாகும்.

 நண்பகல் வழிபாடு - செல்வம் பெருகும்.

 மாலை வழிபாடு - பாவம் நீங்கும்.

 அர்த்தயாம வழிபாடு - முக்தி கிடைக்கும்...

ஓம் நமசிவாய ஓம் நமசிவாய

திருச்சி உச்சி பிள்ளையாா் கோவில்

திருச்சியை என்றவுடன் கண் முன்னே தெரிவது மலைக்கோட்டையில் உள்ள உச்சி பிள்ளையாா் கோவிலும் அதன் கம்பீரமும் தான்.

 ஸ்வாமி : உச்சி பிள்ளையாா், தாயுமானஸ்வாமி, மாணிக்க விநாயகா்.

 அம்பாள் : மட்டுவாா்குழலி.

  தீர்த்தம் : காவிரி தீர்த்தம், பிரம்ம தீர்த்தம்.

 தலவிருட்சம் : வில்வம்.

  வரலாறு :

1  தென்னிந்தியாவில் உள்ள மாநிலமான தமிழகத்தில் உள்ள திருச்சி மாநகரில் அமைந்துள்ளது உச்சிப்பிள்ளையாா் கோவில். திருச்சீராபுரம் என்ற பெயரே., திருச்சிராப்பள்ளி ஆனது என்கின்றனர்.
2  சுமார் 1800 வருக்ஷங்களுக்கு முன்பே, குணபரன் என்ற மகேந்திர பல்லவ மன்னர் காலத்தில் இதைக் கட்ட ஆரம்பித்து, மதுரை நாயக்க மன்னர்களால் விஜய மன்னர்கள் முன்னிலையில் பூா்த்தி செய்யப்பட்டது. இதைப் பூா்த்தி செய்ய 300 மனிதர்கள் தொடர்ந்து 11 வருடங்கள் உழைத்தாா்கள் என்று வரலாற்றுக் குறிப்பு கூறுகின்றது.

3  இந்த கோவிலுக்கு செல்லும் படிகள் செங்குத்தாக இருக்கிறது. இங்கிருந்து பார்த்தால், திருச்சி நகா் முழுவதும் அழகாய் காணலாம்.
மேலும் ஸ்ரீரங்கம் கோவிலும் காவேரி நதியும், கொள்ளிடமும் நன்கு தெரியும். இது, 150 அடி உயரமும், 437 படிக்கட்டுக்களும் கொண்டது.

4  இம்மலையில் மூன்று நிலைகளில் கோவில்கள் அமைந்துள்ளன. கீழே மாணிக்க விநாயகர் கோவில், மேலே உச்சிப்பிள்ளையாா் கோவில், மற்றும் இடையே தாயுமானவா் கோவில் ஆகியவை உள்ளன. தாயுமானஸ்வாமி  கோவிலில் நூற்றுகால் மண்டபம் உள்ளது., மேலும் தாயுமானஸ்வாமி கோவிலின் விமானம் தங்கத்தால் வேயப்பட்டுள்ளது. இதைத் தவிர பல்லவர் கால குடைவரை கோவிலும்., பாண்டியா் கால குடைவரை கோவிலும் இம்மலையில் உள்ளன.

5  மலைகோட்டையின் தெற்கு பக்கத்தில் பல்லவர்கள் காலத்தில் உருவாக்கப்பட்ட குகை கோவில்கள் உள்ளன.

6  உலகத்திலேயே மிகவும் பழமையான மலைக்கோவில் இது என்று கூறுகின்றனா். இவைகள் எல்லாம் இங்குள்ள கல்வெட்டுக்கள் மூலம் அறியலாம்.

7 துவாக சமதரை அமைப்பிலேயே உள்ள திருச்சி மாநகரின் மத்தியில் சுமார் 83 மீட்டர் உயரமான இம்மலை அமைந்திருப்பது இயற்கையின் சிறப்பாகும். மிகப் பழமையான மலைகளுள் ஒன்றான இது., ஏறத்தாழ 3400 மில்லியன் வருடங்கள் பழமையானதாகக் கணக்கிடப்படுகிறது.


கோவிலின் சிறப்புகள் :

விநாயகர் என்றாலே வினைகளை களைப்பவா் என்பது பொருள்.
எந்த காரியத்தையும் தொடங்குவதற்கு முன்பு வெற்றியை உறுதி செய்ய., விநாயக பெருமானுக்கு பால் அபிஷேகம் செய்து, அருகம்புல் சாற்றி பக்தர்கள் வழிபட்டு வருகின்றனா்.

சூர்ய நமஸ்காரத்தின் முக்கிய அம்சங்கள்

சூரிய நமஸ்காரம் செய்தால்…
பூமியிலுள்ள அனைத்து படைப்புகளுக்கும், ஆதாரமாக விளங்குவது சூரியன். நாம்இரவில் உறங்கி காலையில் எழும்போது, நம் உடலும் உள்ளுறுப்புகளும் மிகவும்சோர்வான நிலையில் இருக்கும். இரத்த ஓட்டமும் குறைவாக இருக்கும். காலையில்எழுந்து சூரிய நமஸ்காரம் செய்வதால் உடல் புத்துணர்வு பெற்று இரத்த ஓட்டம்அதிகரித்து உடலும் உள்ளமும் சுறுசுறுப்படையும்.
உடல், உள்ளம், மூச்சு, ஆன்மா இவை அனைத்தையும் ஒருங்கிணைத்து ஒன்றாகநலமாகச் செயல்பட வைப்பதே சூரிய நமஸ்காரமாகும். சூரிய நமஸ்காரத்தில் உள்ளபன்னிரண்டு யோகாசன நிலைகளை சென்ற இதழ்களில் தெரிந்துகொண்டோம் சூரியநமஸ்காரத்தின் பன்னிரண்டு நிலைகளில் ஒன்றின் தொடர்ச்சியாகவே மற்றொன்றுவரவேண்டும்.
ஐந்து வயது முதல் எண்பது வயதிற்கு உட்பட்டவர்கள் வரை சூரிய நமஸ்காரம்செய்யலாம். அதிகாலையில் செய்வது மிகவும் நல்லது. அதுவும் குறிப்பிட்ட காலைநேரத்தில் செய்வது மனதிற்கு ஒரு ஒழுக்க முறையை கொண்டுவரும். பன்னிரெண்டுஆசனங்களையும் அவரவர் வேகத்திற்கு, உடல் தகுதிக்கு ஏற்ப, 5 முதல் 15நிமிடங்கள் செய்யலாம்.
• முழுமையாக யோகாசனங்கள், பிராணாயாமம், தியானம் செய்ய முடியாதவர்கள் சூர்ய நமஸ்காரம் மட்டுமாவது செய்யலாம். ஏனைய ஆசனங்கள் செய்ததின் போல் பலன்கள் கிடைக்கும்.
• 12 ஆசனங்கள் இணைந்திருப்பதால், உடற்பயிற்சி, யோகாசனங்களின் பலன்கள் கிட்டும். 12 ஆசனங்களும் முதுகுத்தண்டுக்கு பயிற்சி அளிக்கின்றன.
• காலையில் எழும் சூரியனை நோக்கி செய்வது உத்தமம்.
• உயர் ரத்த அழுத்தம், ஆர்த்தரைடீஸ் உள்ளவர்கள் யோகா குருவை அணுகி அவரின் ஆலோசனைப் படி செய்யவும்.
செய்முறை
நிலை 1
கிழக்கு திசையை நோக்கி நிமிர்ந்து நிற்கவும். இது தடாசன நிலையாகும்.
• மூச்சை உள்ளிழுத்து கைகளை கூப்பிக் கொண்டு மார்பை ஒட்டினாற் போல் வைத்துக் கொள்ளவும்.
• நார்மலாக மூச்சுவிட்டுக் கொண்டு சூரியனை நோக்கவும்.

நிலை 2
மூச்சை உள்ளிழுத்து கைகளை தூக்கவும்.
• எவ்வளவு முடியுமோ அவ்வளவு பின்னால் வளையவும்.
நிலை 3
முழங்காலை வளைக்காமல், முன்னோக்கி குனியவும். இதை மூச்சை வெளிவிட்டுக் கொண்டு செய்யவும். கைகள் தரையை தொடும் வரை குனியவும். முதலில் முடியாவிட்டாலும், போகப் போக சரியாகி விடும்.
நிலை 4
மூச்சை உள்ளிழுத்துக் கொண்டு இடது முழங்காலை வளைத்து வலது காலை எவ்வளவு முடியுமோ அவ்வளவு நீட்டவும்.
• இரண்டு உள்ளங்கைகளும் தரையில் படிந்திருக்கும்.
நிலை 5
மூச்சை வெளியே விட்டு இடது காலை நீட்டவும், இடது பாதத்தை வலது பாதத்தின் அடியில் வைக்கவும்.
• உள்ளங்கைகளும், பாதங்களும் தரையில் அழுத்தியபடியே வெளி மூச்சு விட்டு ஆசனபகுதியை மேலே தூக்கவும்.
நிலை 6
கால்கள், முழங்கால்கள், மார்பு, கைகள் மற்றும் தாடை தரையை தொடுமாறு தரையில் படுக்கவும்.
• இடுப்பையும், அடிவயிற்றையும் மேலே தூக்கவும்.
• மூச்சை வெளியே விடவும்.
நிலை 7
ஆறாம் நிலையிலிருந்து மூச்சை உள்ளிழுத்து உடலை இடுப்பிலிருந்து மேலே தூக்கவும். இரண்டு கைகளையும் இதற்கு பயன்படுத்தவும்.
• எவ்வளவு பின்னால் குனிய முடியுமோ அவ்வளவு குனிய வேண்டும்.
நிலை 8
மூச்சை வெளியே விட்டு உடலை தூக்கவும், இடுப்பை மேலே உயர்த்தி தலையை இரு கைகளுக்கும் நடுவில் கீழே அழுத்தி இருக்கவும்.
• பாதங்கள், குதிகால்கள் தரையை தொட்டுக் கொண்டு இருக்க வேண்டும்.
நிலை 9
இவை நான்காம் நிலையை போன்றதே. கால்களை மாற்றி வைக்க வேண்டும்.
• மூச்சை உள்ளிழுத்து வலது காலை, கைகளுக்கு எதிராக கொண்டு வர வேண்டும். இடது காலும், முழங்காலும் தரையில் பட வேண்டும்.
• தலையை இலேசாக தூக்கி மேலே பார்க்கவும்.
நிலை 10
மூச்சை வெளியே விட்டு இடது காலை முன்னே கொண்டு வரவும். முழங்கால்களை நேராக வைத்துக் கொள்ள வேண்டும்.
• தலையை மூன்றாவது நிலையில் குறிப்பிட்டவாறு வைத்துக் கொள்ள வேண்டும்.
நிலை 11
இதை இரண்டாம் நிலை ஆசனத்தை போல் திருப்பி செய்ய வேண்டும்.
நிலை 12

முதல் நிலையில் சொன்னபடியே செய்ய வேண்டும்.
சூரிய நமஸ்காரத்தின் பயன்கள்
இதயத்தை முடுக்கிவிட்டு இரத்த ஒட்டத்தை வேகப்படுத்தி உடலின் ஆரோக்கியத்தை நிலைநாட்டுவதில் சூரிய நமஸ்காரம் சிறந்த இடம் பெறுகின்றது. இது இரத்தக் கொதிப்பை கட்டுப்படுத்தும். இதயத் துடிப்பைச் சமன் செய்யும். கை, கால் போன்ற தூரவெளி உறுப்புகளுக்குச் சூடு கொடுத்துக் காக்கும்.
சூரிய நமஸ்காரம் ஜீரண மண்டலத்திற்கு உயிரூட்டி ஆற்றலை அளிக்கின்றது. கல்லீரல், வயிறு, மண்ணீரல், குடல்கள் எல்லாம் கசக்கி கசக்கிப் பிடித்து விடுவது போன்று மசாஜ் செய்யப்படுகின்றன.
மலச்சிக்கல் பிரச்சனை சரியாகிவிடுகிறது.
பசியின்மை பறந்தோடுகின்றன.
சூரிய நமஸ்காரத்தில் உடல் அசைவுகளும் மூச்சு ஒட்டமும் இணக்கமாக நடைபெறுகின்றன. நுரையீரல்களில் காற்றோட்டம் தாராளமாகின்றது. இரத்தம் உயிர்க்காற்றால் நலம் பெறுகின்றது. ஏராளமான கரிசக்காற்றையும் பிற நச்சுப் பொருள்களையும் மூச்சு மண்டலத்திலிருந்து வெளியேற்றுவதன் மூலம் சூரிய நமஸ்காரம் உடலுக்குப் பெரும் நன்மை விளைவிக்கின்றது.
சிம்பதட்டிக், பாராசிம்பதட்டிக் நரம்புகளின் செயல்களை நெறிப்படுத்துவதன் மூலம் நல்ல ஒய்வுக்கும் உறக்கத்திற்கும் உதவுகின்றது. இதனால் நினைவாற்றல் அதிகரிக்கின்றது.
பிற உயிரணுக்களைக் காட்டிலும் நரம்பு உயிரணுக்கள் மிக மிக தாமதமாகவே விழிப்புற்று உயிராற்றல் பெறுகின்றன. இருப்பினும் இடையறாத முறையான பயிற்சியாலும் சலிக்காத முயற்சியாலும் சிறுகச் சிறுக நரம்பு உயிரணுக்கள் தத்தம் சாதாரணக் காரியங்களைச் செய்யத்தக்க அளவில் வலுவடைகின்றன.
சூரிய நமஸ்காரத்தில் கழுத்து முன் பின் வளைகின்றது. இதனால் தைராயிட், பாராதைராயிட் சுரப்பிகளுக்கு இரத்தம் கிடைக்கின்றது. அவை செயல்படுவதனால் எல்லா எண்டோக்கிரைன் சுரப்பிகளும் தமக்குரிய இயல்பான காரியங்களைச் செய்கின்றன.
தோல் புத்துணர்வு பெற்றுப் பொலிவடைகின்றது. சூரிய நமஸ்காரத்தை முறைப்படி செய்யும் போது வியர்வை உண்டாகும். ஏராளமாக உடலில் உள்ள நச்சுப்பொருட்கள் தோலின் வழியே வெளியேறும். நன்றாக வியர்க்கும் வரை இப்பயிற்சி செய்வது நல்லதென சூரிய நமஸ்காரத்தைப் பிரபலப்படுத்திய அவுண்ட் அரசர் கூறுகின்றார். வியர்வை பத்துப் பதினைந்து நிமிடங்களிலேயே வெளிவருவதை அனுபவத்தில் அறியலாம். தோலின் மூலம் வியர்வை வெளிவரும் அளவுக்கு உடல்நலம் ஓங்கும்.
சூரிய நமஸ்காரத்தில் உடலில் உள்ள தசைகள் அனைத்தும் வலுவடைகின்றன. குறிப்பாக கழுத்து, தோள், கை, மணிக்கட்டு, வயிற்றுச்சுவர், தொடை, கெண்டைக்கால், கணுக்கால் முதலிய பகுதிகளில் தசைகள் பயிற்சியால் உரம் பெறுகின்றன.
கொழுப்பால் வயிறு, தொடை, இடுப்பு, கழுத்து, நாடி முதலிய இடங்களில் உண்டாகும் மடிப்புகள் மறையும்.
தோல், நுரையீரல், குடல், சிறுநீரகம் முதலிய பகுதிகள் வழியே சரியாக மலம் (கழிவுப் பொருட்கள்) வெளியேறுவதால் உடலில் விரும்பத் தகாத துர்நாற்றம் ஏற்படுவதில்லை.
சூரிய நமஸ்காரத்தில் உடல் சரியான அளவில் அமையப் பெறுவதால் அது எந்த விளையாட்டுப் பயிற்சி வேலைகளுக்கும் எப்போதும் தயார் நிலையில் இருக்கும். இளமை, நலம், அழகு மூன்றும் ஒருங்கே அமைந்து உடலுக்கும் உயிருக்கும் அழியா இன்பத்தைக் கொடுக்க வல்லது.

கோயில்களுக்கு செல்ல குழந்தைகளை கண்டிப்பாக பழக்குங்கள்..இறை என்று சொன்னால் கேட்கவில்லை என்றால் அறிவியலை கூறுங்கள் :

1. பூமியின் காந்த அலைகள் அதிகம் வீசப்படும் இடங்களில்தான் கோயில்கள் இருக்கும்.

2. சக்தியும், பாஸிட்டிவ் எனர்ஜியும் அதிகம் கொண்டிருக்கும், இது நார்த் போல் சவுத் போல் திரஸ்ட் வகை ஆகும்.

3. கர்ப்பகிரகம் அல்லது மூலஸ்தானம் என்று அழைக்கப்படும் மூலவர் சிலைதான் இந்த மையப்பகுதியில் வீற்றீருக்கும்.

4. இந்த இடம்தான் அந்த சுற்று வட்டாரத்திலேயே காந்த மற்றும் பாஸிட்டிவ் எனர்ஜி அதிகம் காணப்படும் இடம் ஆகும்.

5. இந்த மெயின் கர்ப்பகிரகத்தின் கீழே சில செப்பு தகடுகள் பதிக்கபட்டிருக்கும் அது தான் கீழே இருக்கும் அந்த எனர்ஜியை அப்படி பன்மடங்காக்கி வெளிக் கொணரும்.

6. அதுபோக எல்லா மூலஸ்தானமும் மூன்று சைடு மூடி வாசல் மட்டும் தான் திறந்து இருக்கும் அளவுக்கு கதவுகள் இருக்கும். இது அந்த எனர்ஜியை லீக் செய்யாமல் ஒரு வழியாக அதுவும் வாசலில் இடது மற்றும் வலது புறத்தில் இருந்து இறைவனை வணங்கும் ஆட்களுக்கு இந்த எனர்ஜி கிடைக்க செய்யப்பட்டது ஆகும் ..

7. கோயிலின் பிரகாரத்தை இடமிருந்து வலமாய் சுற்றி வர காரணம் எனர்ஜியின் சுற்று பாதை இது தான் அதனால் தான் மூலஸ்தானத்தை சுற்றும் போது அப்படியே எனர்ஜி சுற்றுபாதை கூட நாமும் சேர்ந்து சுற்ற அந்த எனர்ஜி அப்படியே உங்கள் உடம்பில் வந்து சேரும்.

8. இந்த எனர்ஜி நமது உடம்புக்கும், மனதிற்கும், மூளைக்கும் தேவையான ஒரு பாஸிட்டிவ் காஸ்மிக் எனர்ஜி.

9. மூலஸ்தானத்தில் ஒரு விளக்கு கண்டிப்பாய் தொடர்ந்து எரிந்து கொண்டிருக்கும் அது போக அந்த விக்கிரகத்திற்க்கு பின் ஒரு விளக்கு இருக்கும்.அதை சுற்றி கண்ணாடி ஒன்று இருக்கும்.

10. அது அந்த எனர்ஜியை அப்படி பவுன்ஸ் செய்யும் ஒரு டெக்னிக்கல் செயல்தான்.

11. அது போக மந்திரம் சொல்லும் போதும், மணியடிக்கும் போதும் அங்கே செய்யபடும் அபிஷேகம் அந்த எனர்ஜியை மென்மேலும் கூட்டி ஒரு கலவையாய் கொண்டு வரும் ஒரு அபரிதமான எனர்ஜி ஃபேக்டரிதான் மூலஸ்தானம் என்பது..

12. பூக்கள், கர்ப்பூரம் (பென்ஸாயின் கெமிக்கல்), துளசி (புனித பேஸில்), குங்குமப்பூ (சேஃப்ரான்),கிராம்பு (கிளவ்) இதை சேர்த்து அங்கு காப்பர் செம்பில் வைக்கபட்டு கொடுக்கும் தீர்த்தம் ஒரு ஆன்டிபயாட்டிக்.

13. இதை மூன்று தடவை கொடுக்கும் காரணம் ஒன்று உங்கள் தலையில் தெளித்து இந்த உடம்பை புண்ணியமாக்க, மீதி இரண்டு சொட்டு உங்கள் உடம்பை பரிசுத்தமாக்க.

14. இந்த தீர்த்தம் வாய் நாற்றம், பல் சுத்தம் மற்றும் இரத்ததை சுத்த படுத்தும் ஒரு அபரிதமான கலவை. கோயிலுக்கு முன்பெல்லாம் தினமும் சென்று வந்த மானிடர்களுக்கு எந்த வித நோயும் அண்டியது இல்லை என்பதற்கு இதுதான் காரணம்.

15. கோயிலுக்கு மேல் சட்டை அணிந்து வர வேண்டாம் என சில கோயில்களில் கூறுவதற்கும் இது தான் முக்கிய காரணம் அந்த எனர்ஜி, அப்படியே மார்பு கூட்டின் வழியே புகுந்து உங்கள் உடம்பில் சேரும் என்பது ஐதீகம்.

16. பெண்களுக்கு தாலி அணியும் காரணமும் இது தான்.
நிறைய பெண்களுக்கு ஆண்களை போன்று இதய நோய் வராமல் இருக்கும் காரணம் இந்த தங்க மெட்டல் இதயத்தின் வெளியே நல்ல பாஸிட்டிவ் எனர்ஜியை வாங்கி உள்ளே உள்ள கொழுப்பை கூட கரைக்கும் சக்தி இருப்பதாக ஒரு கூடுதல் தகவல்.

17. பல மைல் தூரத்தில் இருந்து பயணம் செய்திருப்பினும், மூலவரின் தரிசனம் கிட்டும்போது, அந்த சில நொடிகளில் அந்த உடம்பில் ஏற்படும் ஒரு மென்மையான சிலிர்ப்பும், ஒரு வித நிம்மதியும் ஏற்படுகிறது என்றால் அதற்க்கு காரணம், கோயிலின் மூலஸ்தானம் மற்றும் அதில் உள்ள எனர்ஜி.

18. கோயிலின் கொடி மரத்திற்க்கும் மூலஸ்தானதிர்க்கும் ஒரு நேரடி வயர்லெஸ் தொடர்பு உண்டு. கோயில் மேல் இருக்கும் கலசம் சில சமயம் இரிடியமாக மாற இது தான் காரணம். கீழ் இருந்து கிளம்பும் மேக்னெட்டிக் வேவ்ஸ் மற்றும் இடியின் தாக்கம் தான் ஒரு சாதாரண கலசத்தையும் இரிடியமாக மாற்றும் திறன் படைத்தது.

19. அது போக பெரும்பாலும் கோயில் இடி தாக்கும் அபாயம் இல்லாமல் போன காரணம் கோயில் கோபுரத்தில் உள்ள இந்த கலசங்கள் ஒரு சிறந்த மின் கடத்தி ஆகும் ..

20. நல்ல மானிடர் இருவேளை கோயிலுக்கு சென்று வந்தால் மனிதனின் உடல் மட்டுமல்ல அவனின் மனதும் மூளையும் சுத்தமாகும்.

இவ்வளவு புனிதத்துவம் வாய்ந்த கோயில்களுக்கு குடும்பத்துடன் சென்று வர பழகுவோம்
குழந்தைகளையும் பழக்குவோம்.

அது அறிவியல் ஆகட்டும் ..எதுவாகட்டும் ....இறை சக்தி நம்மை காக்கட்டும் ... 

ஏகாதசிகளும்... அதன் பலன்களும்

விரதங்களில் தலைசிறந்தது ஏகாதசி விரதமே. இந்த விரத மகிமையினால் ஆகாதது ஒன்றுமே இல்லை. ஆண்டிற்கு 25 ஏகாதசிகள் வருகின்றன. அவை முறையே கிருஷ்ண பட்சத்தில் (தேய்பிறை), சுக்ல பட்சத்தில் (வளர்பிறை) வரும். சில ஆண்டுகள் ஓர் ஏகாதசி அதிகமாக வரலாம். அதை கமலா ஏகாதசி என்று அழைப்பார்கள். மேற்கண்ட 25 ஏகாதசிகளுக்கும் ஒவ்வொரு கதை உண்டு. இவற்றில் சிறப்பு வாய்ந்தது வைகுண்ட ஏகாதசி என்பதாகும். அந்த ஏகாதசிகளின் பெயர்களையும் அந்த விரதத்தால் ஏற்படும் பயன்களையும் அறிவோம்.

01 சித்திரை_மாதம்_கிருஷ்ண பட்சத்தில் வரும் ஏகாதசி "பாப மோகினி" என்று அழைக்கப்படுகிறது.

02 சித்திரை_மாதம்_சுக்ல பட்சத்தில் வரும் ஏகாதசியை "காமதா" என்கிறார்கள்.

03 வைகாசி_மாதம்_கிருஷ்ண பட்சத்தில் வரும் ஏகாதசி "வருதித்" எனப்படும்.

04 வைகாசி_மாதம்_சுக்ல பட்சத்தில் வரும் ஏகாதசியை "மோகினி" என்பார்கள்.

05 ஆனி_மாதம்_கிருஷ்ண பட்சத்தில் வருவது "அபார" ஏகாதசியாகும்.

06 ஆனி_மாதம்_சுக்ல பட்சத்தில் வரும் ஏகாதசி "நிர்ஜலா" என்றழைக்கப்படும்.

07 ஆடி_மாதம்_கிருஷ்ண பட்சத்தில் வருவது "யோகினி" ஏகாதசியாகும்.

08 ஆடி_மாதம்_சுக்ல பட்சத்தில் வரும் ஏகாதசி "சயனி" என்று அழைக்கப்படுகிறது.

09 ஆவணி_மாதம்_கிருஷ்ண பட்சத்தில் வரும் ஏகாதசியை "காமிகா" என்பார்கள்.

10 ஆவணி_மாதம்_சுக்ல பட்சத்தில் வருவது "புத்ரஜா" ஏகாதசியாகும்.

11 புரட்டாசி_மாதம்_கிருஷ்ண பட்சத்தில் வரும் ஏகாதசி "அஜா" எனப்படும்.

12 புரட்டாசி_மாதம்_சுக்ல பட்சத்தில் வருவது "பத்மநாபா" ஏகாதசியாக உள்ளது.

13 ஐப்பசி_மாதம்_கிருஷ்ண பட்சத்தில் வரும் ஏகாதசி "இந்திரா" ஏகாதசி என்றழைக்கப்படுகிறது.

14 ஐப்பசி_மாதம்_சுக்ல பட்சத்தில் வருவது "பாபங்குசா" ஏகாதசியாகும்.

15 கார்த்திகை_மாதம்_கிருஷ்ண பட்சத்தில் வரும் ஏகாதசி "ரமா" ஏகாதசி எனப்படும்.

16 கார்த்திகை_மாதம்_சுக்ல பட்சத்தில் வருவது "பிரபோதின" ஏகாதசியாகும்.

17 மார்கழி_மாதம்_கிருஷ்ண பட்சத்தில் வரும் ஏகாதசியை "உற்பத்தி" என்றழைப்பார்கள்.

18 மார்கழி_மாதம்_சுக்ல பட்சத்தில் வருவது "மோட்ச" (வைகுண்ட) ஏகாதசி எனப்படுகிறது.

19 தை_மாதம்_கிருஷ்ண பட்சத்தில் வரும் ஏகாதசியானது "சுபலா" எனப்படும்.

20 தை_மாதம்_சுக்ல பட்சத்தில் வருவது "புத்ரதா" ஏகாதசி என்று அழைக்கப்படுகிறது.
.
21 மாசி_மாதம்_கிருஷ்ண பட்சத்தில் வரும் ஏகாதசியை "ஷட்திலா" என்கிறார்கள்.

22 மாசி_மாதம்_சுக்ல பட்சத்தில் வரும் ஏகாதசியானது "ஜயா" எனப்படுகிறது.

23 பங்குனி_மாதம்_கிருஷ்ண பட்சத்தில் வருவது "விஜயா" ஏகாதசி என்றழைக்கப்படும்.

24 பங்குனி_மாதம்_சுக்ல பட்சத்தில் வரும் ஏகாதசி "ஆமலகி" எனப்படும்.

25 ஆண்டில் கூடுதலாக வரும் ஏகாதசி "கமலா ஏகாதசி" எனப்படும். அன்று மகாலட்சுமியை வழிபடுவது சிறப்பு.

அம்பரிஷன் என்னும் மன்னன் விஷ்ணுவின் மீது அதீத பக்தி கொண்டிருந்தான். ஒரு வருடம் முழுவதும் ஏகாதசி விரதம் இருந்து விஷ்ணுவின் அருளைப் பெற்றான். 🍀ஒருமுறை மன்னன் ஏகாதசி விரதம் இருந்து அதை முடிக்கும் வேளையில் துர்வாச முனிவர் அங்கு வந்தார். மன்னன் அவரை வரவேற்று உணவு உண்ண வரும்படி அழைத்தார். முனிவரும் சம்மதித்து ஆற்றில் நீராடி விட்டு வருவதாக கூறிச் சென்றார்.

வெகு நேரமாகியும் முனிவர் வரவில்லை. விரதம் முடிவதற்குள் மன்னன் சாப்பிடவில்லை என்றால் விரத பங்கம் ஏற்பட்டு விடும். இதனால் அவர் துளசி தீர்த்தத்தை அருந்தி உபவாசத்தை முடித்துக்கொண்டார். இதை அறிந்த துர்வாச முனிவர் கடும் கோபம் கொண்டார். தனது சிகையில் இருந்து ஒரு முடியை பிடுங்கி அதை அம்பரிஷனை கொல்வதற்கு ஏவினார். அது பூதமாக மாறி மன்னனை துரத்தியது.

மன்னன் விஷ்ணுவை பிரார்த்தனை செய்தான். உடனே விஷ்ணுவின் சக்கராயுதம் துர்வாசரை துரத்தியது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் மும்மூர்த்திகளிடம் சரண் அடைந்தான். 

அருள்மிகு கல்யாண வெங்கட்ரமணா் திருக்கோவில் — தான்தோன்றி மலை

ஆதிசேஷனுக்கும்., வாயு பகவானுக்கும் நடந்த போட்டியில் சிதறிய திருவேங்கடமலையின் ஒரு பகுதிதான் தான்தோன்றிமலையாகும். இங்கே பக்தர்கள் அனைவருக்கும் வேண்டிய அருளை தந்து கல்யாண வெங்கட்ரமணா் அருள்புரிந்து வருகிறாா். இக்கோவில் கரூா் மாவட்டத்தில் அமைந்துள்ளது.

  ஸ்வாமி : கல்யாண வெங்கட்ரமணா்

  உற்சவர் - ஸ்ரீநிவாசா்

  அம்பாள் : ஸ்ரீதேவி., பூ(மி)தேவி.

  தலவரலாறு :
 ஸ்ரீ. சுசா்மா என்னும் பக்தன் தனது மனைவியுடன் குழந்தை பாக்கியம் வேண்டி திருப்பதிக்கு யாத்திரை மேற்கொண்டாா். யாத்திரையின் போது காவிரிக்கரையில் தங்கி இருந்தாா். அப்போது நாரதர் கனவில் தோன்றி திருமக்கூடலூா் என்ற கூடுதுறைக்கு செல்லுங்கள். அங்கு உங்களைச் சிலா் வரவேற்பாா்கள் என்று சொன்னதைத் தொடர்ந்து அங்கு சென்றனா்.

 அங்கு தச்சர்கள் சுசா்மாவை வரவேற்று கல்வேலை நடக்கும் இம்மலைக்கு அழைத்துச் சென்ற போது மலையில் பிரகாசமான ஒளி ஒன்று கிளம்பியது. இதனையடுத்து பாறை பிளவுண்டு பெருமாள் காட்சி தந்தாா். கேட்ட வரத்தையும் அருளையும் தந்தாா். இவ்வாறு பெருமாள் இங்கு எழுந்தருளியுள்ளதாக வரலாறு. இங்கு பெருமாள் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறாா். இங்கே கல்யாண வெங்கட்ரமணா் திருக்கல்யாண வைபவம் மிகவும் சிறப்பாக நடைபெறுகிறது.

 இந்த கோவில் 3000 ஆண்டுகள் பழமையான குடைவரைக் கோவிலாகும். இந்தக் கோவிலுக்கு தென்திருப்பதி என்ற சிறப்பு பெயரும் உண்டு.


திருவிழாக்கள் :

✍ சித்திரை., புரட்டாசி., மாசி பெருந்திருவிழா நடைபெறுகிறது.

பிரார்த்தனை :

✍ குழந்தை பாக்கியம் பெற., கல்வியில் சிறப்பிடம் பெற., குடும்பத்தில் ஐஸ்வர்யம் நிலைக்க., நோய் தீர இங்கு வேண்டிக்கொள்ளலாம்.

நேர்த்திக்கடன் :

✍ பிரார்த்தனை நிறைவேறியதும் பெருமாளுக்கு திருமஞ்சனம் செய்து, துளசிமாலை, புது வஸ்திரம் சாத்தி வழிபாடு செய்கின்றனா்.

பகவான்_என்பதன்_பொருள்

பகவான் என்பதை பசும்+ஆன் என்று பிரிக்கலாம்.

 பசும் என்றால் ஆறு.

ஆன் என்றால் உடையவன்.

நானே எல்லாம் என்கிற ஞானம்,

 உலகத்தை எப்படி வேண்டுமானாலும் ஆட்டிப் படைக்கும் பலம்,

உலகிலுள்ள செல்வத்துக்கெல்லாம் சொந்தமாகிய ஐஸ்வர்யம்,

 எதையும் வெற்றி கொள்ளும் வீரியம் அல்லது தைரியம்,

 உலகத்திலுள்ள எல்லாக் கிரகங்கள், பொருட்களை அந்தந்த இடத்தில் இருந்து மாறவிடாமல் செய்யும் ஆற்றல்,

சூரிய, சந்திர நட்சத்திரங்கள் என ஒளிவீசும் தேஜஸ் என்ற பிரகாசம்

 ஆகியவை அவனது ஆறு குணங்களாகும்.

மொத்தத்தில் ஞானம், பலம், வீரியம், ஐஸ்வர்யம், ஆற்றல், தேஜஸ் ஆகிய ஆறு குணங்களுக்கு அதிபதி  என்பதே  பகவான் என்பதன் பொருள்.

 இறைவன்
*****
 அருவமா,
*****
 உருவமா?
********

இறைவன் அருவமா, உருவமா என்ற கேள்வி தொன்று தொட்டே கேட்கப்பட்டு வருகிறது.

அறிவு ரீதியாக சிந்திப்போர் பலருக்கும் விதவிதமான உருவங்களில் இறைவன் இருப்பான் என்பதை நம்ப முடிவதில்லை.

 உருவ வழிபாடு காலங்காலமாக நம் நாட்டில் இருந்து வருகிறது.

அப்படி வழிபடுபவர்கள் அறிவை அகற்றி வைத்தவர்களும் அல்ல என்பதால் ஒரு குழப்பம் எழுகிறது.

எது சரி? இறைவன் அருவமா, உருவமா?

எல்லாம் அறிந்த நம் முன்னோர்கள் இது பற்றி நிறையவே சொல்லி இருக்கிறார்கள்.

 அவற்றைப் பார்ப்போம்.

வேதங்களில் முதன்மையான ரிக்வேதம் சொல்கிறது.

 “உண்மையான இறைவன் ஒருவனே.

 ஞானிகள் அவனைப் பல விதங்களில் வர்ணிக்கிறார்கள்”. (ரிக்வேதம் 1.64.46)

”இப்படியன்,
இந்நிறத்தன்,
இவ்வண்ணத்தன்,
இவன் இறைவன் என்று எழுதிக் காட்ட"

முடியாத பரம்பொருள் என்கிறார் அப்பர் பெருமான்.

மாணிக்க வாசகரும்

"உருவமும் அருவமும் ஆய பிரான்"

என்று சிவபெருமானைப் போற்றுகிறார். உருவமாகவும், அருவமாகவும் இறைவன் இருப்பதாகச் சொல்கிறார்.

சிவனடியார்கள் சொன்னதைப் பார்த்தோம்.

இனி வைணவப் பெரியோரான நம்மாழ்வார் சொல்வதைப் பார்ப்போம்.

உளன் எனில் உளன் அவன் உருவம் இவ்வுருவுகள்.

உளன் அலன் எனில் அலன் அவன்

 அருவமிவ்வருவுகள்
உளனென இலனென
 அவைகுணமுடைமையில்

உளன் இரு
 தகைமையோடு ஓழிவிலன் பரந்தே

அவன் இருக்கிறான் என்பவர்க்கு உருவமான ஸ்தூல சரீரமாகவும்,

அவன் இல்லையென்பார்க்கு அருவமான சூட்சும சரீரமாகவும்

இரு வகைப்பட்ட தன்மைகளை உடையவனாக

அந்த பரந்தாமன் இருப்பதால்,

 என்றும்
எங்கும் வியாபித்து  இருக்கும் நிலை கொண்டவன் அவனே

 என்று நம்மாழ்வார் கூறுகிறார்.

பின் ஏன் உருவ வழிபாடு என்ற கேள்விக்கும் அப்பர் பெருமான் இன்னொரு இடத்தில் விளக்கம் கூறுகிறார்.

ஆரொருவார் உள்குவார் உள்ளத்துள்ளே
அவ்வுருவாய் நிற்கின்ற அருளும் தோன்றும்

அன்பால் நினைக்கின்றவர் எந்த உருவில் நினைத்தாலும்

 கடவுள் அவ்வுருவில் வந்து அருள் புரிவார் என்கிறார் அவர்.

 அருவமான இறைவனை உள்ளத்தில் இருத்துவது மிகவும் கடினம்.

கூர் நோக்கு நிலையில் எண்ணக் குவியலுக்கு ஒரு உருவம் தேவை.

 உள்ளம் பற்றிக் கொள்ள ஒரு உருவம் இருந்தால்

வழிபடுதல் சுலபமாகிறது  என்பதால்

உருவ வழிபாடு ஆரம்பமாயிருக்கலாம்.

அதே நேரத்தில் ஒவ்வொரு இறை உருவத்திலும் ஆழ்ந்த பொருள் இருக்கின்றது என்பதை மறந்து விடக்கூடாது.

 இறைவனின் தோற்றத்தில் ஒரு பொருள்,

அவன் வைத்திருக்கும் ஆயுதங்கள் ஒவ்வொன்றிற்கும் ஒரு பொருள்,

அவன் வாகனத்திற்கு ஒரு பொருள் என்று பல நுண்ணிய பொருள்கள்

அவனது திருவுருவத்தில் இருக்கும்படி ஆன்மிகப் பெரியோர் படைத்தனர்.

 இறைவனின் எண்ணிலா உயர்குணங்கள் பலவற்றையும்

 ஒவ்வொரு திருவுருவும் விளக்கும்படி இருந்தபடியால்

பக்தன் அந்த உருவத்தைக் காணும் போதே

அத்தனை குணங்களும் மனதில் பதிய வணங்குதல்

அவனுக்கு எளிதாகும்.

இந்த உயர்ந்த நோக்கத்தில் தான் உருவமில்லை என்று ஒத்துக் கொண்ட போதும்

நம் முன்னோர் பல உருவங்களில் அவனைக் கண்டு மகிழ்ந்தார்கள்.

 இந்த உண்மை திருவாசகத்தில் மிக அழகாகப் பாடப்பட்டிருக்கின்றது.

ஒருநாமம் ஒருருவம் ஒன்றுமில்லாற் காயிரந்
திருநாமம் பாடிநாம் தெள்ளேணம் கொட்டாமோ.

என்று அவர் திருவாசகத்தில திருத்தெளேணத்தில் கூறுகின்றார்.

ஒரு பெயரும், ஒரு வடிவமும், ஒன்றும் இல்லாத இறைவனுக்கு, ஆயிரம் திருப்பெயர்களைக் கூறி, நாம் தெள்ளேணம் கொட்டாமோ?

என்று கேட்கிறார்.

அருவ நிலையில் உள்ள இறைவன் உயிர்களின் பொருட்டுத்

தன் நிலையிலிருந்தும் இரங்கி அடுத்த நிலையாகிய அருவுருவத்தில்,

அருவமும் உருவமும் கலந்த நிலையில்

 அதாவது லிங்க வடிவத்தில் காட்சி தருகிறான்

என்றும் சிவனடியார்கள் கூறுகிறார்கள்.

அருவம் கண்ணுக்குத் தோன்றாதது.

உருவம் கண்ணுக்குப் புலப்படுவது.

 இந்த இரண்டும் சேர்ந்ததே லிங்கம் என்பர்.

“காணாத அருவினுக்கும் உருவினுக்கும் காரணமாய்

நீணாகம் அணிந்தார்க்கு நிகழ்குறியாம் சிலைலிங்கம்”

இந்த அருவுருவ வடிவாகியன சிவலிங்கமே

 நம் நாட்டில் எல்லா சிவன்  கோயில்களிலும்

 மூலஸ்தானத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

உண்மையான இலக்கு இறைவனை உள்ளுக்குள் நாம் உணர்தல்.

 அது தான் மிக முக்கியம்.

 உருவமா, அருவமா என்ற வாதங்களில் நம் வாதத் திறமைகளை வளர்த்துக் கொள்ளலாமே ஒழிய ஆன்மிகத்தை வளர்த்துக் கொள்ள முடியாது.

இதை அருணகிரிநாதர் தெளிவாக விளக்குகிறார்.

“உருவெனவும் அருவெனவும் உளதெனவும் இலதெனவும்

உழலுவன பரசமய கலையார வாரமற

உரையவிழ உணர்வவிழ உளமவிழ உயிரவிழ

உளபடியை உணருமவர் அநுபூதி ஆனதுவும்”  

இப்பாடலில் அருணகிரிநாதர்

 கடவுளை
 உருவம் என்றும்,
அருவம் என்றும்,
உள்ளது எனவும்,
இல்லை எனவும் தடுமாற வைப்பது

 மற்றைய சமயக் கூறுகளின் ஆரவாரங்கள்.

அதை ஒழித்து

நம் அனுபவ அறிவுக்கு

 மெய்ப்பொருள் விளங்கி,

உண்மை உணர்வு வெளிப்பட்டு,

உள்ளம் நெகிழ,

உயிர் உருகி

உள்ளதை உள்ளபடி உணரவேண்டும் என்கிறார் அவர்.

நமது அனுபவ அறிவே நமக்கு கடவுளை உள்ளபடி உணர்த்தும்.

ஆதலால் சமயங்களைக் கடந்த கடவுளை நமக்குள்ளேயே தேடிக் கண்டுகொள்ளலாம்.  

ஒருவருக்கு எளிதாக இருப்பது இன்னொருவருக்குக் கடினமாக இருக்கலாம்.

 அந்த இன்னொருவருக்கு எளிதாக இருப்பது இவருக்குக் கடினமாக இருக்கலாம்.

எந்த வழியிலும் குற்றமில்லை.

அதனால் இந்த வழிதான் உயர்ந்தது இது தாழ்ந்தது

என்று சொல்வது அறிவாகாது.

இறைவன் அருவமாகவும், உருவமாகவும், அருவுருவமாகவும் அருள் புரியக் காத்திருக்கிறான்.

 யாருக்கு எந்த வழியில் பிரார்த்திப்பது எளிதாக இருக்கின்றதோ,

 யாருக்கு எந்த வழியில் வணங்கினால் மனம் எளிதில் இறைவனிடம் லயிக்கிறதோ,

அவரவர் அந்தந்த வழியில் இறைவனை வழிபடலாம்.

அந்த சுதந்திரம் நமக்குத் தரப்பட்டிருக்கிறது.

 எனவே நம் இயல்பிற்கு ஏற்ற வழியில் இறைவனை வணங்கி இறையனுபவம் பெற வேண்டுமே ஒழிய

 சர்ச்சைகளில் தங்கி இறைவனை இழந்து விடக்கூடாது.⁠⁠⁠⁠

மகாலட்சுமி இருக்கும் 26 இடங்கள்

மகாலட்சுமி இருக்கும் இடங்களை அறிந்து அவற்றை வழிபட்டால் திருவருளைப் பெறலாம்.

1. திருமால் மார்பு

திருமகள் திருமாலின் மார்பில் உறைகிறாள். ஆதலின் திருவுறைமார்பன் -ஸ்ரீநிவாசன் என்று திருமாலுக்குப் பெயர். திருமகளின் அருளைப் பெறத் திருமாலையும் வழிபட வேண்டும். திருமாலை விடுத்துத் திருமகளை மட்டும் வணங்கக் கூடாது. திருமகளைப் புருஷாகாரம் என்பர். அடியாருக்கு அருள்புரியும்படித் திருமாலைத் தூண்டுபவள் திருமகளே.

2. பசுவின் பின்புறம்

பசு தேவராலும், மூவராலும், முத்தேவியராலும் தொழப்பெறும் கோமாதா. காரணம், பசுவின் உடலில் ஒவ்வொரு பாகத்திலும் ஒரு தெய்வம் இருப் பதுதான். பசுவின் பின்புறத்தில் மகாலட்சுமி வாசம் செய்கிறாள். காலையில் எழுந்ததும் காணத் தக்கவற்றுள் பசுவின் பின் பக்கமும் ஒன்று. அருகம்புல்லைப் பசுவிற்கு கொடுப்பது 32 வகை அறங்களுள் ஒன்றதாகும். ‘யாவர்க்கும் ஆம் பசுவிற்கு ஒரு வாயிறை’ என்றார் திருமூலர்.

3. யானையின் மத்தகம்

யானையின் மத்தகம் பிரணவம் போன்றது. (ஓங்காரம் போன்றது) அங்கே திருமகள் வீற்றிருக்கிறாள்.

4. தாமரை

மலர்களில் சிறந்தது தாமரை. ‘பூவெனப்படுவது பொறிவாழ் பூவே’ என்றும், ‘பூவினுக்கு அருங்கலம் பொங்கு தாமரை’ என்றும் கூறுவர். தாமரை செல்வத்தைக் கொடுக்கும். பொன்னின் அளவைப் பத்மநிதி, சங்கநிதி என்பர். பத்மம் என்றால் தாமரை. எல்லாத் தெய்வங்களுமே பத்மத்தில்தான் அமர்ந்துள்ளனர். பத்மாசனத்தில் அமர்வதே சிறப்பு. திருமகளுக்குரிய இடம் தாமரை. ஆதலின் அவளை மலர்மகள் என்பர்.

5. திருவிளக்கு

விளக்கின்றி பூஜையில்லை. எல்லாத் தெய்வங்களையும் விளக்கொளியில் வழிபடலாம். ஆதலின் வள்ளலார் அருட்பெருஞ்ஜோதியாய் ஆண்டவரைக் கண்டார். எல்லாத் தெய்வகங்களும் விளக்கில் இருப்பினும் விளக்கை லட்சுமியாகக் கருதுவது நம் மரபு.

6. சந்தனம்

மங்கலப்பொருளான சந்தனத்தில் மகாலட்சுமி உறைகிறாள். தெய்வங்களுக்குரிய சோடச உபசரணையில் சந்தனம் அணிவிப்பதும் ஒன்று. சுபகாரியஙக்ளில் சந்தனம் அவசியம்.

7. தாம்பூலம்

தாம்பூலம் மங்களகரமானது. சுபகாரியங்களுக்கும் பூஜைக்கும் தேவையானது. தாம்பூலத்தை மாற்றிக் கொண்டால் சம்மதம் தெரிவித்தாயிற்று என்றே பொருள்.

8. கோமயம்

பசுவிடமிருந்து வெளிப்படும் கோஜலம், கோமயம் (சாணம்) பால், தயிர், நெய் ஆகிய ஐந்தும் இறைவனுக்கு உகந்தவை. இதனைப் பஞ்சகவ்யம் என்பர். ‘ஐந்தாடுவான் அரன்’ என்பார் அப்பர். வாயிலில் சாணம் தெளித்தால் வீட்டைச் சாணத்தால் மெழுகினால் கிருமிகள் வாரா, லட்சுமி வருவாள். பஞ்சகவ்யம் பருகினால் நோய் வராது. பஞ்ச கவ்யம் பரம ஒளஷதம் என்பர்

9. கன்னிப்பெண்கள்

தூய கன்னியர் தெய்வ நலம் பொலிபவர். அவர்களிடத்து லட்சுமி கடாட்சம் உண்டு. பெண்ணைப் பார்த்தால் மகாலட்சுமி மாதிரி இருக்கிறாள் என்று சொல்வது உலக வழக்கு.

10. உள்ளங்கை

உள்ளங்கையில் லட்சுமி உள்ளாள். காலையில் எழுந்ததும் கையைப் பார்க்க வேண்டும். கையை நம்பித்தான் வாழ்க்கையே இருக்கிறது. கையால் உழைத்தால்தான் தனலட்சுமியைக் காண முடியும். கை என்றாலே சக்தி என்றுதான் பொருள். அவர் பெரிய கை என்றால் அவர் செல்வமுடையவர் என்று பொருள்.

11. பசுமாட்டின் கால்தூசு

புனிதமான பசுவின் பாதம் பட்ட இடத்தில் பாவம் நில்லாது. அதன் கால் தூசு பட்ட இடத்தில் செல்வம் கொழிக்கும். மாடு என்றால் செல்வந்தானே!

12. வேள்விப்புகை

வேள்விப் புகை உயிர் காக்கும். போபாலில் வேள்வி நடந்த இரு வீடுகளுக்குள்ளே நச்சுக்காற்று நுழையவில்லை. வேள்விப்புகை ஆரோக்கியம் தரும். வேள்விப் புகையில் வானம் பொழியும். வையகம் செழிக்கும்.

13. சங்கு

சங்கும் அதன் ஒலியும் மங்களகரமானவை. நிதியின் ஓர் அளவை சங்கம் என்பர். ‘சங்கநிதி... பதுமநிதி இரண்டுந்தந்து’ எனும் நாவரசர் சொல் உணர்வோம்.

14. வில்வமரம்

வில்வ மரத்தடியில் ரைவத மன்வந்திரத்தில் மகாலட்சுமி தோன்றி னாள். வில்வம் சிவபெருமானுக்கு உகந்த பத்திரம். அதைவிடச் சிறந்த பத்திரம் ஒன்றும் இல்லை. வைணவத்தலமான ஸ்ரீரங்கத்தில் தல விருட்சம் வில்வம், திருநகரிக்கு வில்வாரண்யம் என்று பெயர். திருவஹிந்திரபுரத்தில் மகாலட்சுமிக்கு வில்வத்தால்தான் அர்ச்சனை. வில்வ மரத்தடியில் செல்வம் தரும் நாயகி வசிக்கிறாள்.

15. நெல்லி மரம்

நெல்லி ஆயுளை வளர்க்கும்: ஆரோக்கியம் தரும். அதனடி யில் மகாலட்சுமி உறைகிறாள். நெல்லிதிருமாலின் அருள் பெற்றது. ஹரிபலம் என்று இதற்கு ஒரு பெயர். நெல்லிக்கனி இருக்கும் வீட்டில் லட்சுமி இருப்பாள். துவாதசியன்று நெல்லிக்காய் சேர்த்தால்தான் ஏகாதசிப் பலன் உண்டு.

16. தர்ம சிந்தனை உடையாரின் உள்ளம்
.

17. வெண்ணிற மாடப் புறாக்கள் வாழும் இடம்

18. கலகமில்லாத மகளிர் வாழும் இடம்

19. தானியக் குவியல்

20. கல்லும் உமியும் இல்லாத அரிசிக் குவியல்

*
21. பணிவுடைமையும் இன்சொல்லும் உடையவர்*

22. பகிர்ந்துண்டு வாழும் மனிதர்

23. நாவடக்கம் உள்ளவர்

24. மிதமாக உண்பவர்

25. பெண்களைத் தெய்வமாக மதிப்பவர்

26. தூய்மையான ஆடை அணிகிறவர் ஆகிய இடங்களிலும் மனிதர்களிடத்தும் மகாலட்சுமி எப்போதும் இருக்கிறாள்.

பொறுமையைவிட மேலான தவமுமில்லை.

திருப்தியை விட மேலான இன்பமுமில்லை.

இரக்கத்தை விட உயர்ந்த அறமுமில்லை.

மன்னித்தலை விட ஆற்றல் மிக்க ஆயுதமில்லை.

நந்தி வகைகள்

1. இந்திரநந்தி ( போகநந்தி) - கோவிலுக்கு வெளியே இறைவனை ( சிவபெருமானை) நோக்கி இருப்பது 5 ம் பிரகாரத்தில் ஆகும்

2. பிரம்மநந்தி ( வேதநந்தி) - இது மிக பெரிய நந்தி இதற்கு வேத நந்தி ( அ) வேதவெள்விடை என்று பெயர் பெரிய மண்டபத்தில் கம்பீரமாக வீற்றிருப்பது ஆகும் ( உ-ம்) காஞ்சி ராமேஸ்வரம் திருவிடைமருதூர் தஞ்சை திருவாவடுதுறை கங்கை கொண்ட சோழபுரம் ஆகிய தலங்களில் பெரிய நந்தியாக உள்ளது

3. விஷ்ணுநந்தி - மால்விடை சிவபெருமான் திரிபுரம் எரிக்க முற்பட்டபோது விஷ்ணு இடப வடிவமெடுத்து அவரை ( சிவபெருமானை) ஏந்தியது ஆகும் சிவன் சன்னதி அருகில் உள்ளது

4. ஆத்மநந்தி - கொடி மரத்தருகில் இருப்பது ( இறைவன் - பதி, ஆத்மநந்தி - பசு, கொடிமரம் - பாசம்) பிரதோச காலத்தில் வழிபாட்டிற்குரியது ஆகும் ஆத்மநந்தி ( அ ) சிலாத நந்தி

5. தருமநந்தி - தருமம் நந்தியாக நிலைத்திருப்பது தரும நந்தி மகா மண்டபத்தில் உள்ளது சுவாமி ( சிவபெருமான்) அருகில் உள்ளது சிறியதாக மூலவரின் வயிற்றுப்பகுதியான தொப்புள் பகுதியை உயிர்நிலையாகக்கொண்டு அதன் மட்டத்திலிருந்து நேராக நந்தி நாசி அமைந்து மூலவருக்கு உயிர்நிலை தருவதாக அமைந்து என்றும் ஆனந்த நிலையில் உள்ளார் இதன் மூச்சு காற்று சுவாமியின் ( சிவபெருமானின்) மீது படுகிறது

மேலும் 2 நந்தி

1. அதிகார நந்தி - உட்கோபுர வாயிலில் வடக்கு நோக்கி இருப்பது ஆகும்

2. விருஷப நந்தி - கருவறை பின்புறம் இருப்பது ஆகும்

நந்தி அருள் பெற்ற நாதர் 8 பேர்

1. சனகர்

2. சனந்தனர்

3. சனதனர்

4. சனற்குமாரர்

5. சிவயோகமாமுனி

6. பதஞ்சலி

7. வியாக்ரபாதர்

8. திருமூலர்

என்ற 8 பேர் நந்தியெம் பெருமான் அருள் பெற்றவர்கள் ஆவார்கள்

ஒவ்வொரு ஆலயத்திலும் ஒவ்வொரு வித்தியாசமான நிகழ்வுகள் உண்டு

அதிசய கோயில்.

ஆறு நாழிகைக்கு ஒரு முறை நிறம் மாறும் பஞ்சவர்ணேஸ்வரர் !!!
திருநல்லூர் பஞ்சவர்ணேஸ்வரர்

இங்கு இறைவன் இன்றும் ஐவகை நிறத்துடன் தினந்தோறும் காட்சி தருவது பக்தர்களை மெய்சிலிர்க்க வைக்கும் காட்சியாகும்.

இம்மூல லிங்கத்தின் பாணம், இன்ன பொருளால் உருவாக்கப்பட்டது என்று கூற இயலாத நிலையில் தாமிர நிறத்தில் விளங்குகிறது.

இங்கு இறைவன் இன்றும் ஐவகை நிறத்துடன் தினந்தோறும் காட்சி தருவது பக்தர்களை மெய்சிலிர்க்க வைக்கும் காட்சியாகும்.

பகலில் ஆறு நாழிகைகளுக்கு ஒரு முறை நிறம் மாறும் இந்த சுயம்புலிங்கம்,

காலை 6 முதல் 8.25 வரை தாமிர நிறத்திலும்,

 காலை 8.26 முதல் 10.48 வரை இளஞ்சிவப்பு நிறத்திலும்,

காலை 10.49 முதல் 1.12 வரை உருக்கிய தங்கம் போன்ற நிறத்திலும்,

 மதியம் 1.13 முதல் 3.36 வரை நவரத்தின பச்சை நிறத்திலும்,

மாலை 3.37 முதல் 6 மணி வரை இன்ன நிறம் என அறிய முடியாத வண்ணத்திலும் காட்சி அளிப்பது காணக் கிடைக்காத அருங்காட்சியாகும்.

👉👉👉கும்பகோணத்தை அடுத்த சுந்தரப்பெருமாள் கோயிலிருந்து 3கி.மீ. தூரத்திலுள்ளது, திருநல்லூர்.

ஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் பாடல் பெற்ற தேவாரத்தலம்.

 இங்கு இறைவன் திருநாவுக்கரசருக்குத் திருவடி சூட்டினார்.

அமர்நீதிநாயனார் முக்தி பெற்ற தலமும் இதுவே ஆகும்.

கோச்செங்கட் சோழனால் திருப்பணி செய்யப்பெற்ற இவ்வாலய மூலவர் சந்நதி உயர்ந்த இடத்தில் உள்ளது.

இவரை கல்யாண சுந்தரேஸ்வரர், பெரியாண்டேசுவரர் என்று அழைக்கின்றனர்.

இவர் ஒரு நாளில் ஆறு நாழிகைக்கு ஒரு முறை நிறம் மாறி தினமும் ஐந்து வண்ணமாகக் காட்சியளிக்கிறார். தமிழ்முறைப்படி ஒரு நாழிகையென்பது சுமார் 24 நிமிடங்களாகும். எனவே ஆறு நாழிகையென்பது 2 மணி 24 நிமிடங்கள் ஆகிறது. இம்முறையில் மூலவர் கல்யாண சுந்தரேஸ்வரர் காலை 6 மணியிலிருந்து எட்டரை மணி வரை செப்பு நிறமாகவும், இதன் பின்பு 101/2 மணி வரை இளம் சிவப்பு நிறமாகவும், 101/2 மணிக்கு மேல் பிற்பகல் 1 மணி வரை பொன்நிறமாகவும், ஒரு மணிக்கு மேல் மாலை 31/2 மணி வரை மரகதப்பச்சை நிறமாகவும் இதற்குப் பின் சூரியன் மறையும் வரை இனம் காண முடியாத பற்பல நிறமாகவும் காட்சி கொடுத்து பக்தர்களைப் பரவசமடைய வைக்கிறார்.

இதனால் அப்பரடிகள் இவரை ‘‘நிறங்களோர் ஐந்துடையாய்’’ என்று போற்றிட இவரும் பஞ்சவர்ணேஸ்வரர்

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசத்திற்கு கிழக்கில் உள்ள நல்லூரில் வீற்றிருக்கிறார் கிரிசுந்தரி சமேத கல்யாண சுந்தரேசுவரர். இத்திருக்கோயிலின் கோபுரத்தைவிட கைலாயம் போன்று உயர்ந்து நிற்கிறது கருவறை விமானம். இதனை “கைலாய விமானம்’ என்றே அழைக்கிறார்கள். இக்கோயில் ஏழாம் நூற்றாண்டு காலத்தில் கட்டப்பட்டது. மாடக் கோயிலாக விளங்குகிறது. கோட்செங்கட் சோழன் காலத்தில் இக்கோயில் பராமரிக்கப்பட்டதாக தல வரலாறு கூறுகிறது.

சௌந்திர நாயகர், சுந்தர நாதர், பஞ்ச வர்ணேஸ்வரர், அமிர்தலிங்கர், திருநல்லூர் உடைய நாயனார் என்று பல பெயர்களிலும் இவ்விறைவன் அழைக்கப்படுகிறார்.

இம்மூல லிங்கத்தின் பாணம், இன்ன பொருளால் உருவாக்கப்பட்டது என்று கூற இயலாத நிலையில் தாமிர நிறத்தில் விளங்குகிறது. இங்கு இறைவன் இன்றும் ஐவகை நிறத்துடன் தினந்தோறும் காட்சி தருவது பக்தர்களை மெய்சிலிர்க்க வைக்கும் காட்சியாகும்.

இந்த மூல லிங்க அமைப்பில் இன்னொரு சிறப்பும் உள்ளது. இதன் ஆவுடையாரில் இரண்டு பாணங்கள் உள்ளன. இப்படி இரண்டு பாணங்கள் உள்ள அமைப்பு வேறு எங்கும் இல்லை என்று சொல்லப்படுகிறது. இரண்டாவதாக உள்ள சிறிய பாணத்தை பிரதிஷ்டை செய்தவர் அகத்திய ரிஷி என்பார்கள்.

இங்கு அருள்பாலிக்கும் அம்பிகையின் பெயர், கிரி சுந்தரி. மிகப் பெரிய வடிவில், பேரழகுடன், சுவாமிக்கு வடகிழக்கில் தனிக் கோயிலில் தென்முகமாக நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறாள் அம்பாள்.
இந்த ஆலயம் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது.

இந்த ஆலயத்தின் தீர்த்தங்கள் பல. சப்த சாகரம், அக்கினி தீர்த்தம், நாக கன்னி தீர்த்தம், தர்ம தீர்த்தம், தேவ தீர்த்தம், பிரம்ம குண்டம், ஐராவத தீர்த்தம், சந்திர தீர்த்தம், சூரிய தீர்த்தம், காவிரி தீர்த்தம் ஆகியவையே அவை.
இஙிருட்சம், வில்வ மரமாகும். நீண்ட நாட்கள் திருமணம் ஆகாதவர்கள் இவ்விறைவனை வழிபட, தடைப்பட்ட திருமணம் விரைவில் நடந்தேறும் என்பது பக்தர்கள் நம்பிக்கை.

இந்த ஆலயத்தின் தென் பிரகாரத்தில், எட்டு கைகளுடன் சூலாயுதம் தாங்கி அமர்ந்து அருள்பாலிக்கிறாள் அஷ்டபுஜ மகா காளிகாம்பாள். சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் தினசரி நான்கு கால பூஜைகள் நடைபெறுகின்றன.

ஆலயம் திறக்கும் நேரம்:

காலை 6 முதல் மதியம் 1 வரையிலும், மாலை 4 முதல் இரவு 8 வரையிலும் ஆலயம் திறந்திருக்கும்.

அமைவிடம்:

தஞ்சாவூர்-கும்பகோணம் சாலையில் உள்ளது பாபநாசம். இதன் கிழக்கில் உள்ள வாழைப்பழக்கடை என்ற இடத்திலிருந்து, 1 கி.மீ. தொலைவில் உள்ளது திருநல்லூர் என்ற இந்தத் தலம். சுந்தரப் பெருமாள் கோயில் என்ற ரயில் நிலையத்திலிருந்து தெற்கில் இரண்டரை கிலோமீட்டர் தொலைவு சென்றால் இத்தலத்தை அடையலாம்.

சைவ சமயக் குரவர்களில் ஒருவரான திருநாவுக்கரசருக்கு இத்தலத்தில்தான் பரமேஸ்வரன், “திருவடி தீட்சை’ அளித்தார். அதை நினைவூட்டும் வகையில் இங்கு வைணவக் கோயில்கள் போல் “சடாரி’ சாதிக்கும் மரபு உள்ளது. தேவாரப் பாடல் பெற்ற தலம், அப்பராகிய நாவுக்கரசருக்கு திருவடி தீட்சை தந்த தலம் ஆகிய பெரும் பெருமைகளைக் கொண்ட திருத்தலம் இது.⁠⁠⁠⁠

பெருமாள் கோயிலுக்கு செல்பவர்கள் ஒவ்வொரு தெய்வத்திற்கு முன்னும் சொல்ல வேண்டிய மந்திரங்கள் சமஸ்கிருதத்திலும், தமிழிலும் கொடுக்கப்பட்டுள்ளது.

மகாவிஷ்ணு

சாந்தாகாரம் புஜங்க சயநம் பத்மநாபம் ஸுரேசம்
விச்வாகாரம் ககநஸத்ருசம் மேகவர்ணம் சுபாங்கம்
லக்ஷ்மீ காந்தம் கமல நயநம் யோகிஹ்ருத் த்யா நகம்யம்
வந்தே விஷ்ணும் பவ பயஹரம் ஸர்வலோகைக நாதம்
மேகச்யாமம் பீத கௌசேய வாஸம்
ஸ்ரீ வத்ஸாங்கம் கௌஸ்து போத்பாஸிதாங்கம்
புண்யோ பேதம் புண்ட ரீகாய தாக்ஷம்
விஷ்ணும் வந்தே ஸர்வலோகைக நாதம்
ஸசங்க சக்ரம் ஸகிரீட குண்டலம்
ஸபீத வஸ்த்ரம் ஸரஸிரு ஹேக்ஷணம்
ஸஹார வக்ஷஸ்த்தல கௌஸ்துப ச்ரியம்
நமாமி விஷ்ணும் சிரஸா சதுர்ப்புஜம்

அச்சுதன் அமலன் என்கோ!
அடியவர் வினை கெடுக்கும்
நச்சு மாமருந்தும் என்கோ!
நலங்கடல் அமுதம் என்கோ!
அச்சுவைக் கட்டி என்கோ!
அறுசுவை அடிசில் என்கோ!
நெய்ச் சுவை தேறல் என்கோ!
கனிஎன்கோ! பால் என்கேனோ;

லட்சுமி

லக்ஷ்மீம் க்ஷீரஸமுத்ர ராஜ தநயாம் ஸ்ரீ ரங்கதாமேச்வரீம்
தாஸீ பூதஸமஸ்த தேவவநிதாம் லோகைக தீபாங்குராம்
ஸ்ரீ மந்மந்தகடாக்ஷலப்பதவிபவப்ரஹ்மேந்த்ரகங்காதராம்
த்வாம் த்ரைலோக்ய குடும்பிநீம் ஸரஸிஜாம்வந்தே முகுந்தப்ரியாம்
மாநாதீத ப்ரதித விபவாம் மங்களம் மங்களாநாம்
வக்ஷ: பீடீம் மதுவிஜயிநோ பூஷயத்தீம் ஸ்வகாந்த்யா
ப்ரத்யக்ஷõ நுச்ரவிக மஹிமப்ரார்த்தி நீ நயம் ப்ரஜாநாம்
ச்யோ மூர்த்திம் ச்ரியமசரண, த்வாம்சரண்யாம் ப்ரபத்யே
ரக்ஷத்வம் வேததேவேசி தேவ தேவஸ்ய வல்லபே
தாரித்ர்யாத் த்ராஹிமாம் லக்ஷ்மி க்ருபாம் குருமமோபரி.

ராமர்

ஸ்ரீராம சந்த்ர கருணாகர தீனபந்தோ
ஸீதாஸமேத பரதாக்ரஜ ராகவேச
பாபர்த்தி பஞ்ஜன பயாதுர தீனபந்தோ
பாபாம்புதௌ பதித முத்தர மாமநாதம்
ஸ்ரீராகம் தசரதாத்மஜ மப்ரமேயம்
ஸீதாபதிம் ரகுகுலாப்வய ரத்நதீபம்
ஆஜாபுபாஹு மரவிந்த தளாயதாக்ஷம்
ராமம் நிசாசர விநாசகரம் நமாமி.

கிருஷ்ணர்

கோபல ரத்நம் புவனைக ரத்நம்
கோபாங்க நாயௌவந பாக்ய ரத்நம்
ஸ்ரீகிருஷ்ண ரத்நம் ஸுரஸேவ்ய ரத்நம்
பஜா மஹே யாதவ வம்ச ரத்நம்.
லட்சுமி நரசிம்மர்
ஸ்ரீ லக்ஷ்மி நரஸிம்ஹாய நம; ஹரி ஓம்
பாந்தஸ்மான் புருஸூத வைரிபலவன்
மாதங்க மாத்யத் கடா கும்போச்சாத்ரி
விபாட நாதிகபடு ப்ரத்யேக வஜ்ராயுத;

அனுமான்

வாமே கரே வைரிபிதம் வஹந்தம்
சைலம் பரே ச்ருங்கல ஹாரிடங்கம்
ததாந மச்சச்சவி யஜ்ஞ ஸூத்ரம்
பஜே ஜ்வலத் குண்டலம் ஆஞ்ஜநேயம்.
ஸபீத கௌபீந முதஞ்சிதாங் குளிம்
ஸமுஜ்வலந் மௌஜியஜி நோபவீதிநம்
ஸகுண்டலம் லம்பசிகா ஸமாவ் ருதம்
தமரஞ்ஜநேயம் சரணம் ப்ரபத்யே.

அஞ்சிலே ஒன்று பெற்றான்: அஞ்சிலே ஒன்றைத் தாவி
அஞ்சிலே ஒன்று ஆறாக ஆரியர்க்காக ஏகி
அஞ்சிலே ஒன்றுபெற்ற அணங்கு கண்டு அயலார் ஊரில்
அஞ்சிலே ஒன்றை வைத்தான்: அவன் நம்மை அளித்துக் காப்பான்

சாஸ்தா

யஸ்ய தன்வந்தரீ மாதா பிதாருத்ரோ பிஷக்தம்
தம் சாஸ்தார மஹம் வந்தே மரா வைதயம் தயாநிதிம்.

கருடன்

குங்கு மாங்கித வர்ணாய குந்தேந்து தவளாயச
விஷ்ணு வாஹ நமஸ்துப்யம் பக்ஷிராஜாய நேநம

சக்கரத்தாழ்வார்

ஸஹஸ்ராதித்ய ஸங்காசம் ஸஹஸ்ர வதநாம் பரம்
ஸஹஸ்ர தோஸிஸஹஸ்ராரம்ப்ரபத்யே (அ) ஹம்ஸுதர்சநம்
ஹும் கார பைரவம் பீமம் ப்ரபந்நார்த்தி ஹரம் ப்ரபும்
ஸர்வ பாப ப்ரசமநம் ப்ரபத்யேஹம் ஸுதர்சநம்

பாகவதவோத்தமர்கள்

ப்ரஹ்லாத நாரத தபராசர புண்டரீக
வ்யாஸாம்பரீஷ சுகசௌநக பீஷ்மதால்ம்யாந்
ருக்மாங்க தார்ஜுந வஸிஷ்ட விபீஷணாதீந்
புண்யாநிமாந் பரமபாகவதாந் ஸ்மராபி

திருமால் போற்றி

ஓம் அப்பா போற்றி
ஓம் அறமே போற்றி
ஓம் அருளே போற்றி
ஓம் அச்சுதா போற்றி
ஓம் அரவ சயனா போற்றி
ஓம் அரங்கமா நகராய் போற்றி
ஓம் அற்புத லீலா போற்றி
ஓம் அறுமுகனின் அம்மான் போற்றி
ஓம் அனுமந்தன் தேவே போற்றி
ஓம் ஆதியே அனாதி போற்றி
ஓம் ஆழ்வார்கன் தொழுவாய் போற்றி
ஓம் ஆதி மூலனே போற்றி
ஓம் ஆபத்துச் சகாயா போற்றி
ஓம் ஆனைக்கும் அருள்வாய் போற்றி
ஓம் ஆனந்த மூர்த்தியே போற்றி
ஓம் உமையம்மை அண்ணா போற்றி
ஓம் உலகெலாம் காப்பாய் போற்றி
ஓம் உத்தமர் தொழுவாய் போற்றி
ஓம் உம்பருக் கருள்வாய் போற்றி
ஓம் எங்குமே நிறைந்தாய் போற்றி
ஓம் எண்குண சீலா போற்றி
ஓம் ஏழை பங்காளா போற்றி
ஓம் எழில் நிறவண்ணா போற்றி
ஓம் எழில்மிகு தேவே போற்றி
ஓம் கலியுக வரதா போற்றி
ஓம் கண்கண்ட தேவே போற்றி
ஓம் கருட வாகனனே போற்றி
ஓம் கல்யாண மூர்த்தி போற்றி
ஓம் காமரு தேவே போற்றி
ஓம் காலனைத் தவிர்ப்பாய் போற்றி
ஓம் கோக்களைக் காத்தாய் போற்றி
ஓம் கோவிந்தா முகுந்தா போற்றி
ஓம் சர்வலோகேசா போற்றி
ஓம் சாந்தகுண சீலா போற்றி
ஓம் சீனிவாசா போற்றி
ஓம் சிங்கார மூர்த்தி போற்றி
ஓம் சிக்கலை யறுப்பாய் போற்றி
ஓம் சிவபிரான் மகிழ்வாய் போற்றி
ஓம் தவசிகள் தொழுவாய் போற்றி
ஓம் தரணியைக் காப்பாய் போற்றி
ஓம் திருமகள் மணாளா போற்றி
ஓம் திருமேனி உடையாய் போற்றி
ஓம் திருவேங்கடவா போற்றி
ஓம் தருமலைக் கொழுந்தே போற்றி
ஓம் திருத்துழாய் அணிவாய் போற்றி
ஓம் தீந்தமிழ் அருள்வாய் போற்றி
ஓம் கடலமு தளித்தாய் போற்றி
ஓம் நந்தகோ பாலா போற்றி
ஓம் நான்முகன் பிதாவே போற்றி
ஓம் நாரதர் துதிப்பாய் போற்றி
ஓம் நவமணி தரிப்பாய் போற்றி
ஓம் நரசிம்ம தேவே போற்றி
ஓம் நான்மறை தொழுவாய் போற்றி
ஓம் பாற்கடல் கிடந்தாய் போற்றி
ஓம் பாவலர் பணிவாய் போற்றி
ஓம் தசாவ தாரா போற்றி
ஓம் தயாநிதி ராமா போற்றி
ஓம் தந்தைசொல் காத்தாய் போற்றி
ஓம் தவக்கோலம் பூண்டாய் போற்றி
ஓம் பட்டத்தைத் துறந்தாய் போற்றி
ஓம் பரதனுக் கீந்தாய் போற்றி
ஓம் பாண்டவர் துணைவா போற்றி
ஓம் பரந்தாமா கண்ணா போற்றி
ஓம் பாஞ்சாலி மானம் காத்தாய் போற்றி
ஓம் பார்புகழ் தேவே போற்றி
ஓம் புண்ணய மூர்த்தி போற்றி
ஓம் புலவர்கள் புகழ்வாய் போற்றி
ஓம் வாமன வரதா போற்றி
ஓம் உலகினை அளந்தாய் போற்றி
ஓம் பிரகலாதன் பணிவாய் போற்றி
ஓம் பரகதி அருள்வாய் போற்றி
ஓம் துருவனும் தொழுவாய் போற்றி
ஓம் துருவநிலை தந்தாய் போற்றி
ஓம் சபரியின் கனியே போற்றி
ஓம் நற்கதி தந்தாய் போற்றி
ஓம் வையகம் புகழ்வாய் போற்றி
ஓம் வைகுண்ட வாசா போற்றி
ஓம் முழுமதி வதனா போற்றி
ஓம் மும்மலம் அறுப்பாய் போற்றி
ஓம் கமலக் கண்ணா போற்றி
ஓம் கலைஞான மருள்வாய் போற்றி
ஓம் கஸ்தூரி திலகா போற்றி
ஓம் கருத்தினில் அமர்வாய் போற்றி
ஓம் பவளம்போல் வாயா போற்றி
ஓம் பவப்பணி ஒழிப்பாய் போற்றி
ஓம் நான்கு புயத்தாய் போற்றி
ஓம் நற்கதி அருள்வாய் போற்றி
ஓம் சங்கு சக்கரனே போற்றி
ஓம் சன்மார்க்க மருள்வாய் போற்றி
ஓம் கோபிகள் தலைவா போற்றி
ஓம் கோபமும் தணிப்பாய் போற்றி
ஓம் வேணு கோபாலா போற்றி
ஓம் வேட்கையைத் தணிப்பாய் போற்றி
ஓம் புருடோத் தமனே போற்றி
ஓம் பொன்புகழ் அருள்வாய் போற்றி
ஓம் மாயா வினோதா போற்றி
ஓம் விஜய ராகவனே போற்றி
ஓம் வினையெலாம் ஒழிப்பாய் போற்றி
ஓம் பதும நாபனே போற்றி
ஓம் பதமலர் தருவாய் போற்றி
ஓம் பார்த்த சாரதியே போற்றி
ஓம் பார்வேந்தர் தொழுவாய் போற்றி
ஓம் கரிவரத ராஜா போற்றி
ஓம் கனிவுடன் காப்பாய் போற்றி
ஓம் சுந்தர ராஜா போற்றி
ஓம் சுகமெலாம் தருவாய் போற்றி
ஓம் அனைத்துமே ஆனாய் போற்றி
ஓம் அரி அரி நமோ நாராயணா போற்றி
ராமபிரான் போற்றி
ஓம் அயோத்திக்கு அரசே போற்றி
ஓம் அருந்தவத்தின் பயனே போற்றி
ஓம் அச்சுதானந்த கோவிந்த போற்றி
ஓம் அலவிலா விளையாட்டுடையாய் போற்றி
ஓம் அபயம் அளிக்கும் விரதா போற்றி
ஓம் அறத்தின் நாயகனே போற்றி
ஓம் அன்பர் தம் இதயம் உறைவோய் போற்றி
ஓம் அழகிய திருமுகத்தோய் போற்றி
ஓம் அளவிலா ஆற்றல் படைத்தோய் போற்றி
ஓம் அகிலமெல்லாம் காப்பாய் போற்றி
ஓம் அரிசினம் அகற்றினாய் போற்றி
ஓம் அகலிகை சாபம் தீர்த்தோய் போற்றி
ஓம் அன்பர் அகமகிழும் அற்புத நாமா போற்றி
ஓம் அஞ்ஞான இருள்அகற்றும் அறிவுச்சுடரே போற்றி
ஓம் அளவோடு பேசும் குணநிதியே போற்றி
ஓம் அன்பிலே விளைந்த ஆரமுதே போற்றி
ஓம் அரக்கர்க்குக் கூற்றே போற்றி
ஓம் அனுமன் நினைவகலா தாரக நாமனே போற்றி
ஓம் அங்கதனிடம் அன்பு கொண்டோய் போற்றி
ஓம் அனந்த கல்யாண குணலயா போற்றி
ஓம் அசுவமேத யாக பிரபுவே போற்றி
ஓம் ஆதித்தன் குலக்கொழுந்தே போற்றி
ஓம் ஆண்டகையே போற்றி
ஓம் ஆதரவற்றோர்க்கு ஒரு புகலிடமே போற்றி
ஓம் ஆத்ம-ஞான ஜனகன் திருமகளை மணந்தோய் போற்றி
ஓம் ஆதி மூலமே போற்றி
ஓம் இகல் வெல்லும் இளையவன் அண்ணலே போற்றி
ஓம் இராமநாதனைப் பூஜித்த ஸேதுராமா போற்றி
ஓம் இகபர சுகம் அளிப்பாய் போற்றி
ஓம் உண்மைக்கோர் உருவமே போற்றி
ஓம் உரக சயனா போற்றி
ஓம் உலகம் காக்கும் உத்தமா போற்றி
ஓம் ஊக்கம் கொடுக்கும் <உயிர்ச் சுடரே போற்றி
ஓம் ஊழி முதல்வா போற்றி
ஓம் எழில் நாயகனே போற்றி
ஓம் ஏறுநடையுடை ஏந்தலே போற்றி
ஓம் ஏழு மராமரங்களைத் துளைந்தவனே போற்றி
ஓம் ஏக பாணப்பிரயோகா போற்றி
ஓம் ஏக பத்தினி விரதனே போற்றி
ஓம் ஐம்புலன் வென்றோய் போற்றி
ஓம் ஒப்பிலா ஒளியே போற்றி
ஓம் ஓம்கார தத்துவமே போற்றி
ஓம் ஒளஷத நாம ஸ்வரூபனே போற்றி
ஓம் கவியரசின் உயிர்த் துணைவா போற்றி
ஓம் கபந்தனுக்கு முக்தி கொடுத்தாய் போற்றி
ஓம் கரனை ஒழித்தோய் போற்றி
ஓம் காமகோடி ரூபனே போற்றி
ஓம் காமம் அழிப்பவனே போற்றி
ஓம் காருண்ய மூர்த்தியே போற்றி
ஓம் காலம் எல்லாம் நிலைத்து நிற்கும் கருப்பொருளே போற்றி
ஓம் காசி முக்திக்குக் காரண நாமா போற்றி
ஓம் குரு பக்த ரத்தினமே போற்றி
ஓம் கோசலை மைந்தா போற்றி
ஓம் கோதண்ட பாணியே போற்றி
ஓம் சங்கடம் தீர்க்கும் ஸத்குருவே போற்றி
ஓம் சத்யவாக்கு சத்ய விக்ரமனே போற்றி
ஓம் சரணாகத வத்ஸலா போற்றி
ஓம் சபரிக்கு மோஷம் கொடுத்தாய் போற்றி
ஓம் சோக நாசனா போற்றி
ஓம் சோலைத் திருமலை அழகனே போற்றி
ஓம் சௌபாக்கியம் தருவாய் போற்றி
ஓம் தசரதன் தவப்புதல்வா போற்றி
ஓம் தாய் தந்தை சொல் வேதமெனக் கொண்டோய் போற்றி
ஓம் தியாகப்பரப்பிரம்மம் தொழும் கானமூர்த்தியே போற்றி
ஓம் நிலையானவனே போற்றி
ஓம் நித்ய மங்கள வைபவா போற்றி
ஓம் நீல மேக சியாமளனே போற்றி
ஓம் பரசுராமன் கர்வம் அடக்கினாய் போற்றி
ஓம் பட்டமரம் தளிர்க்க வைக்கும் பாவனநாமா போற்றி
ஓம் பத்துத்தலை தத்தத் கணைதொடுக்கும் பரம்பொருளே போற்றி
ஓம் பண்டரிநாத விட்டலா போற்றி
ஓம் பரத்வாஜ முனிவர் தொழும் பாதனே போற்றி
ஓம் பங்கஜ லோசனா போற்றி
ஓம் பரிமள வாசனா போற்றி
ஓம் பாதுகா பட்டாபிஷேக மூர்த்தியே போற்றி
ஓம் பிறவிப்பெருங்கடல் புணையாவாய் போற்றி
ஓம் மாசிலா மணியே போற்றி
ஓம் மாருதியின் பிரபுவே போற்றி
ஓம் மாதவமுனிவர்தாள் தேடி வணங்குவாய் போற்றி
ஓம் மாயிருள் ஞாலம் மறுவின்றி விளக்குவாய் போற்றி
ஓம் மாதேவன் சந்ததம் சிந்திக்கும் தாரகநாமா போற்றி
ஓம் மாய மாரீசனை மாய்த்தோய் போற்றி
ஓம் முக்குணம் கடந்தோய் போற்றி
ஓம் மூவிரு முகன் செல்வ மாமனே போற்றி
ஓம் ரகு வம்சத்தை நிலை நிறுத்தியவனே போற்றி
ஓம் லவகுசர்களின் அன்புத் தந்தையே போற்றி
ஓம் வசிஷ்ட முனிவரால் முடிசூட்டப் பெற்றாய் போற்றி
ஓம் வாயுகுமாரனின் மனநிறைவே போற்றி
ஓம் வானரர் தொழுது ஏத்தும் வள்ளலே போற்றி
ஓம் விராதனை வதம் செய்தாய் போற்றி
ஓம் விஷயங்களைக் கடந்தவனே போற்றி
ஓம் விருப்பு வெறுப்பு அற்றவனே போற்றி
ஓம் விஜயராகவனே போற்றி
ஓம் விசுவாமித்திரன் வேள்வி காத்தோய் போற்றி
ஓம் வீடணுக்கு அபயமும், அரசும் அளித்தாய் போற்றி
ஓம் வெற்றிக்கு ஒருவனே போற்றி
ஓம் வேண்டுவார்க்கு வேண்டுவன ஈவாய் போற்றி
ஓம் வேடன் குகனோடும் ஐவரானாய் போற்றி
ஓம் வேத முதல்வா போற்றி
ஓம் வேந்தர்க்கு வேந்தனே போற்றி
ஓம் வேதனை தீர்ப்பாய் போற்றி
ஓம் வேதங்கள் தேடும் பாதனே போற்றி
ஓம் வேதாந்த சாரமே போற்றி
ஓம் வைகுண்ட வாசா போற்றி
ஓம் வைதேஹி மணாளா போற்றி
ஓம் வைனதேய பிரபுவே போற்றி
ஓம் வையகம் வாழ்விப்பாய் போற்றி
ஓம் ஸ்ரீ ஸீதா லக்ஷ்மண பரத சத்ருக்ண ஹனுமத் சமேத ஸ்ரீ ராமச்சந்த்ர மூர்த்தியே போற்றி போற்றி
தன்வந்திரி பகவான் போற்றி
ஓம் ஸ்ரீ தன்வந்திரி பகவானே போற்றி
ஓம் திருப்பாற்கடலில் தோன்றியவனே போற்றி
ஓம் தீர்க்காயுள் தருபவனே போற்றி
ஓம் துன்பத்தைத் துடைப்பவனே போற்றி
ஓம் அச்சம் போக்குபவனே போற்றி
ஓம் அஷ்டாங்க யோகியே போற்றி
ஓம் அபயம் அளிப்பவனே போற்றி
ஓம் அன்பு கொண்டவனே போற்றி
ஓம் அமரனே போற்றி
ஓம் ஸ்ரீ தன்வந்திரி பகவானே போற்றி
ஓம் அமரப் பிரபுவே போற்றி
ஓம் அருளை வாரி வழங்குபவனே போற்றி
ஓம் அடைக்கலம் கொடுப்பவனே போற்றி
ஓம் அழிவற்றவனே போற்றி
ஓம் அமிர்தம் அளிப்பவனே போற்றி
ஓம் அமிர்த கலசம் ஏந்தியவனே போற்றி
ஓம் அமிர்தத்தை உற்பத்தி செய்தவனே போற்றி
ஓம் அமிர்தமானவனே போற்றி
ஓம் அனைத்தையும் அறிந்தவனே போற்றி
ஓம் ஸ்ரீ தன்வந்திரி பகவானே போற்றி
ஓம் ஆயுர் வேதமே போற்றி
ஓம் ஆயுர் வேதத்தின் தலைவனே போற்றி
ஓம் ஆயுளை நீட்டிப்பவனே போற்றி
ஓம் ஆயுதக்கலை நிபுணனே போற்றி
ஓம் ஆத்ம பலம் தருபவனே போற்றி
ஓம் ஆசாபாசம் அற்றவனே போற்றி
ஓம் ஆனந்த ரூபனே போற்றி
ஓம் ஆகாயத் தாமரையே போற்றி
ஓம் ஆற்றல் பெற்றவனே போற்றி
ஓம் ஸ்ரீ தன்வந்திரி பகவானே போற்றி
ஓம் உலக ரட்சகனே போற்றி
ஓம் உலக நாதனே போற்றி
ஓம் உலக சஞ்சாரியே போற்றி
ஓம் உலகாள்பவனே போற்றி
ஓம் உலகத்தைக் காத்தருள்பவனே போற்றி
ஓம் உலக மக்களால் பூஜிக்கப்படுபவனே போற்றி
ஓம் உயிர் காப்பவனே போற்றி
ஓம் உயிர்காக்கும் உறைவிடமே போற்றி
ஓம் உண்மையான சாதுவே போற்றி
ஓம் ஸ்ரீ தன்வந்திரி பகவானே போற்றி
ஓம் எமனுக்கும் எமனானவனே போற்றி
ஓம் எழிலனே போற்றி
ஓம் எளியார்க்கும் எளியவனே போற்றி
ஓம் எல்லா ஐஸ்வர்யங்களையும் அணிந்தவனே போற்றி
ஓம் எல்லா நலன்களும் அருள்பவனே போற்றி
ஓம் எல்லோருக்கும் வாரி வழங்குபவனே போற்றி
ஓம் எல்லையில்லா இன்பப் பெருக்கே போற்றி
ஓம் எல்லையில்லா பேரின்பமே போற்றி
ஓம் எல்லையற்ற மகிமை கொண்டவனே போற்றி
ஓம் ஸ்ரீ தன்வந்திரி பகவானே போற்றி
ஓம் கருணைக் கடலே போற்றி
ஓம் கருணைக் அமிர்தக்கடலே போற்றி
ஓம் கருணா கரனே போற்றி
ஓம் காக்கும் தெய்வமே போற்றி
ஓம் காத்தருள் புரிபவனே போற்றி
ஓம் காருண்ய மூர்த்தியே போற்றி
ஓம் காவேரியில் ஸ்நானம் செய்பவனே போற்றி
ஓம் குருவே போற்றி
ஓம் கும்பிடும் தெய்வமே போற்றி
ஓம் ஸ்ரீ தன்வந்திரி பகவானே போற்றி
ஓம் சகல நன்மைகளையும் தருபவனே போற்றி
ஓம் சகல செல்வங்களையும் வழங்குபவனே போற்றி
ஓம் சமத்துவம் படைப்பவனே போற்றி
ஓம் சம தத்துவக் கடவுளே போற்றி
ஓம் சகிப்புத் தன்மை மிக்கவனே போற்றி
ஓம் சங்கு சக்கரம் ஏந்தியவனே போற்றி
ஓம் சர்வேஸ்வரனே போற்றி
ஓம் சர்வ லோக சஞ்சாரியே போற்றி
ஓம் சர்வலோகாதிபதியே போற்றி
ஓம் ஸ்ரீ தன்வந்திரி பகவானே போற்றி
ஓம் சர்வ மங்களம் அளிப்பவனே போற்றி
ஓம் சந்திரனின் சகோதரனே போற்றி
ஓம் சிறந்த ஆற்றல் கொண்டவனே போற்றி
ஓம் சித்தி அளிப்பவனே போற்றி
ஓம் சிறந்த அறநெறியோனே போற்றி
ஓம் சீரங்கத்தில் வாழ்பவனே போற்றி
ஓம் சுகம் அளிப்பவனே போற்றி
ஓம் சுகபோக பாக்யம் தருபவனே போற்றி
ஓம் சுபம் தருபவனே போற்றி
ஓம் ஸ்ரீ தன்வந்திரி பகவானே போற்றி
ஓம் தசாவதாரமே போற்றி
ஓம் தீரனே போற்றி
ஓம் தெய்வீக மருந்தே போற்றி
ஓம் தெய்வீக மருத்துவனே போற்றி
ஓம் தேகபலம் தருபவனே போற்றி
ஓம் தேவாதி தேவனே போற்றி
ஓம் தேவர்களால் வணங்கப்படுபவனே போற்றி
ஓம் தேவாமிர்தமே போற்றி
ஓம் தேனாமிர்தமே போற்றி
ஓம் ஸ்ரீ தன்வந்திரி பகவானே போற்றி
ஓம் பகலவனே போற்றி
ஓம் பக்திமயமானவனே போற்றி
ஓம் பண்டிதர்களின் தலைவனே போற்றி
ஓம் பாற்கடலில் தோன்றியவனே போற்றி
ஓம் பாதபூஜைக்குரியவனே போற்றி
ஓம் பிராணிகளின் ஜீவாதாரமே போற்றி
ஓம் புருஷோத்தமனே போற்றி
ஓம் புராண புருஷனே போற்றி
ஓம் பூஜிக்கப்படுபவனே போற்றி
ஓம் ஸ்ரீ தன்வந்திரி பகவானே போற்றி
ஓம் மரணத்தை வெல்பவனே போற்றி
ஓம் மஹா பண்டிதனே போற்றி
ஓம் மஹா மேதாவியே போற்றி
ஓம் மஹா விஷ்ணுவே போற்றி
ஓம் முக்தி தரும் குருவே போற்றி
ஓம் முழு முதல் மருத்துவனே போற்றி
ஓம் ஸ்ரீ தன்வந்திரி பகவானே போற்றி
ஓம் ஸ்ரீ சக்தியே! தன்வந்திரி பகவானே போற்றி போற்றி.

ஸ்ரீ விஷ்ணு அஷ்டோத்தர சதநாமாவளி

ஓம் அச்யுதாய நம:
ஓம் அதீந்தராய நம:
ஓம் அனாதிநிதனாய நம:
ஓம் அளிருத்தாய நம:
ஓம் அம்ருதாய நம:
ஓம் அரவிந்தாய நம:
ஓம் அஸ்வத்தாய நம:
ஓம் ஆதித்யாய நம:
ஓம் ஆதிதேவாய நம:
ஓம் ஆனத்தாய நம:
ஓம் ஈஸ்வராய நம:
ஓம் உபேந்த்ராய நம:
ஓம் ஏகஸ்மை நம:
ஓம் ஓருஸ்தேஜோத்யுதிதராய நம:
ஓம் குமுதாய நம:
ஓம் க்ருதஜ்ஞாய நம:
ஓம் க்ருஷ்ணாய நம:
ஓம் கேஸவாய நம:
ஓம் ÷க்ஷத்ரஜ்ஞாய நம:
ஓம் கதாதராய நம:
ஓம் கருடத்வஜாய நம:
ஓம் கோபதயே நம:
ஓம் கோவிந்தாய நம:
ஓம் கோவிதாம்பதயே நம:
ஓம் சதுர்ப்புஜாய நம:
ஓம் சதுர்வ்யூஹாய நம:
ஓம் ஜனார்த்தனாய நம:
ஓம் ஜ்யேஷ்ட்டாய நம:
ஓம் ஜ்யோதிராதித்யாய நம:
ஓம் ஜயோதிஷே நம:
ஓம் தாராய நம:
ஓம் தமனாய நம:
ஓம் தாமோதராய நம:
ஓம் தீப்தமூர்த்தயே நம:
ஓம் து:ஸ்வப்ன நாஸனாய நம:
ஓம் தேவகீநந்தனாய நம:
ஓம் தனஞ்ஜயாய நம:
ஓம் நந்தினே நம:
ஓம் நாராயணாய நம:
ஓம் நாரஸிம்ஹவபுஷே நம:
ஓம் பத்மநாபாய நம:
ஓம் பத்மினே நம:
ஓம் பரமேஸ்வராய நம:
ஓம் பவித்ராய நம:
ஓம் ப்ரத்யும்னாய நம:
ஓம் ப்ரணவாய நம:
ஓம் புரந்தராய நம:
ஓம் புருஷாய நம:
ஓம் புண்டரீகாக்ஷõய நம:
ஓம் ப்ருஹத்ரூபாய நம:
ஓம் பக்தவத்ஸலாய நம:
ஓம் பகவதே நம:
ஓம் மதுஸூதனாய நம:
ஓம் மஹாதேவாய நம:
ஓம் மஹாமாயாய நம:
ஓம் மாதவாய நம:
ஓம் முக்தானாம் பரமாகதயே நம:
ஓம் முகுந்தாய நம:
ஓம் யக்ஞகுஹ்யாய நம:
ஓம் யஜ்ஞபதயே நம:
ஓம் யஜ்ஞாஜ்ஞாய நம:
ஓம் யஜ்ஞாய நம:
ஓம் ராமாய நம:
ஓம் லக்ஷ்மீபதே நம:
ஓம் லோகாத்யக்ஷõய நம:
ஓம் லோஹிதாக்ஷõய நம:
ஓம் வரதாய நம:
ஓம் வர்த்தனாய நம:
ஓம் வராரோஹாய நம:
ஓம் வஸுப்ரதாய நம:
ஓம் வஸுமனஸே நம:
ஓம் வ்யக்திரூபாய நம:
ஓம் வாமனாய நம:
ஓம் வாயுவாஹனாய நம:
ஓம் விக்ரமாய நம:
ஓம் விஷ்ணவே நம:
ஓம் விஷ்வக்ஸேனாய நம:
ஓம் வ்ரு÷ஷாதராய நம:
ஓம் வேதவிதே நம:
ஓம் வேதாங்காய நம:
ஓம் வேதாய நம:
ஓம் வைகுண்ட்டாய நம:
ஓம் ஸரணாய நம:
ஓம் ஸாந்நாய நம:
ஓம் ஸார்ங்கதன்வனே நம:
ஓம் ஸாஸ்வதஸ்தாணவே நம:
ஓம் ஸிகண்டனே நம:
ஓம் ஸிவாய நம:
ஓம் ஸ்ரீதராய நம:
ஓம் ஸ்ரீநிவாஸாய நம:
ஓம் ஸ்ரீமதே நம:
ஓம் ஸுபாங்காய நம:
ஓம் ஸ்ருதிஸாகராய நம:
ஓம் ஸங்கர்ஷணாய நம:
ஓம் ஸதாயோகினே நம:
ஓம் ஸர்வதோமுகாய நம:
ஓம் ஸர்வேஸ்வராய நம:
ஓம் ஸஹஸ்ராக்ஷõய நம:
ஓம் ஸ்கந்தாய நம:
ஓம் ஸாக்ஷிணே நம:
ஓம் ஸுதர்ஸனாய நம:
ஓம் ஸுரானந்தாய நம:
ஓம் ஸுலபாய நம:
ஓம் ஸூக்ஷ்மாய நம:
ஓம் ஹரயே நம:
ஓம் ஹிரண்யகர்ப்பாய நம:
ஓம் ஹிரண்யநாபாய நம:
ஓம் ஹ்ருஷீகேஸாய நம:

திருமால் புகழ்ப் பாடல்கள்
(கம்பர்)

வேதங்கள் அறைகின்ற உலகெங்கும் விரிந்தனஉன்
பாதங்கள் இவைஎன்னில் படிவங்கள் எப்படியோ
ஒதங்கொள் கடலன்றி ஒன்றினோ (டு) ஒன்றொவ்வாப்
பூதங்கள் தொறும் உறைந்தால் அவையுன்னைப் பொறுக்குமோ ?
தாய்தன்னை அறியாத கன்றில்லை ; தன் கன்றை
ஆயும் அறியும் ; உலகின்தாய் ஆகி, ஐய !
நீயறிதி எப்பொருளும் ; அவை யுன்னை நிலையறியா
மாயை இ(து) என்கொலோ? வாராதே வரவல்லாய் !
(வேறு)
தோய்ந்தும் பொருள் அனைத்தும் தோயாது நின்ற
சுடரே ! தொடக் கறுத்தோர் சுற்றமே ! பற்றி
நீந்த அரிய நெடுங் கருணைக்(கு) எல்லாம்
நிலையமே! வேதம் நெறிமுறையின் நேடி
ஆய்ந்த உணர்வின் உணர்வே ! பகையால்
அலைப்புண்(டு) அடியேம் அடிபோற்ற அந்நாள்
ஈந்த வரம்உதவ எய்தினையே எந்தாய் !
இருநிலத்தவோ? நின் இணையடித்தா மரைதாம் !
மேவாதவர் இல்லை மேவினரும் இல்லை
வெளியோடிருள் இல்லை மேல்கீழும் இல்லை
மூவாமை இல்லை மூத்தமையும் இல்லை
முதல்இடையோ டீறில்லை, முன்னொடுபின் இல்லை !
தேவா ! இங்கு இதுவோ நீ சென்ற நிலை என்றால்,
சிலையேந்தி வந்தெம்மைச் சேவடிகள் நோவக்
காவா தொழியிற் பழிபெரிதோ? அன்றேல்
கருங்கடலில் கண்வளர்வாய் ! கைம்மாறும் உண்டோ ?
நாழி நவைநீர் உலகெலாம் ஆக
நளினத்து நீதந்த நான்முகனார் தாமே
ஊழி பலபலவும் நின்றளந்தால் ஒன்றும்
உலவாப் பெருங்குணத்(த) உத்தமனே ! மேல்நாள்
தாழி தரையாகத் தண்தயிர் நீராகத்
தடவரையே மத்தாகத் தாமரைக்கை நோவ
ஆழி கடைந்தமுதம் எங்களுக்கே ஈந்தாய்
அவுணர்கள்தாம் நின்அடிமை ஆகாமை உண்டே
ஆண்டாள் பாசுரங்கள்
கருப்பூரம் நாறுமோ
கமலப்பூ நாறுமோ
திருப்பவளச் செவ்வாய்தான்
தித்தித்து இருக்குமோ
மறுப்பு ஒசித்த மாதவன்தன்
வாய்ச் சுவையும் நாற்றமும்
விருப்பு உற்றுக் கேட்கிறேன்
சொல் ஆழி வெண்சங்கே !
நாறு நறும் பொழில் மா
லிருஞ்சோலை நம்பிக்கு நான்
நூறு தடாவில் வெண்ணெய்
வாய்நேர்ந்து பராவி வைத்தேன்
நூறு தடா நிறைத்த அக்கார
அடிசில் சொன்னேன்
ஏறுதிரு உடையான் இன்று வந்து
இவை கொள்ளுங் கோலோ !
வாராணமாயிரம்
வாரணம் ஆயிரம் சூழ வலஞ்செய்து
நாரணன் நம்பி நடக்கின்றான் என்று எதிர்
பூரண பொற்குடம் வைத்துப் புறமெங்கும்
தோரணம் நாட்டக் கனாக்கண்டேன் தோழீ நான் !
நாளை வதுவை மணம் என்று நாள்இட்டு
பாளை கமுகு பரிசுடைப் பந்தற்கீழ்
கோளரி மாதவன் கோவிந்தன் என்பான்ஓர்
காளை புகுதக் கனாக்கண்டேன் தோழீநான் !
மத்தளம் கொட்ட வரிச்சங்கம் நின்று ஊத
முத்தடைத் தாமம் நிரைதாழ்ந்த பந்தற்கீழ்
மைத்துனன் நம்பி மதுசூதனன் வந்து என்னைக்
கைத்தலம் பற்றக் கனாக்கண்டேன் தோழீ நான் !
திருப்பாவை
ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி
நாங்கள்நம் பாவைக்குச் சாற்றிநீர் ஆடினால்
தீங்கின்றி நாடெல்லாம் திங்கள்மும் மாரிபெய்து
ஓங்கு பெரும் செந்நெல் ஊடு கயலுகன
பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்ப
தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலைபற்றி
வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும் பசுக்கள்
நீங்காத செல்வம் நிறைந்தேல் ஓர் எம்பாவாய் !
தொண்டரடிப் பொடியாழ்வார் பாசுரங்கள்
பச்சைமா மலைபோல் மேனி
பவளவாய்க் கமலச் செங்கண்
அச்சதா அமரர் ஏறே
ஆயர்தம் கொழுந்தே என்னும்
இச்சுவை தவிர யான் போய்
இந்திர லோகம் ஆளும்
அச்சுவை பெறினும் வேண்டேன்
அரங்கமா நகர் உளானே !
வேதநூல் பிராயம் நூறு
மனிதர்தாம் புகுவ ரேலும்
பாதியும் உறங்கிப் போகும்
நின்றுஅதில் பதினை யாண்டு
பேதை பாலகன் அதாகும்
பிணிபசி மூப்புத் துன்பம்
ஆதலால் பிறவி வேண்டேன்
அரங்கமா நகர் உளானே !
திருமங்கை ஆழ்வார் பாசுரங்கள்
வாடினேன் வாடி வருந்தினேன் மனத்தால்
பெருந்துயர் இடும்பையில் பிறந்து
கூடினேன் கூடிஇளையவர் தம்மோடு
அவர்தரும் கலவியே கருதி
ஓடினேன் ஓடி உய்வதோர் பொருளால்
உணர்வெனும் பெரும்பதம் தெரிந்து
நாடினேன் நாடி நான்கண்டு கொண்டேன்
நாராயணா என்னும் நாமம் !

குலம் தரும் செல்வம் தந்திடும் அடியார்
படுதுயர் ஆயின எல்லாம்
நிலந்தரம் செய்யும் நீள்விசும்பு அருளும்
அருளொடு பெருநிலம் அளிக்கும்
வலம்தரும் மற்றும் தந்திடும் பெற்ற
தாயினும் ஆயின செய்யும்
நலம்தரும் சொல்லை நான்கண்டு கொண்டேன்
நாராயணா என்னும் நாமம் !
செங்கால் மடநாராய் இன்றே சென்று
திருக்கண்ணபுரம் புக்குஎன் செங்கண் மாலுக்கு
என்காதல் என்துணைவர்க்கு உரைத்தி யாகில்
இதுஒப்பது எனக்கு இன்பம் இல்லைநாளும்
பைங்கான்மீது எல்லாம் உனதே ஆகப்
பழனமீன் கவர்ந்து உண்ணத் தருவன் தந்தால்
இங்கே வந்து இனிது இருந்து உன்பெடையும் நீயும்
இருநிலத்தில் இனிது இன்பம் எய்தலாமே! 

திருமண தடை நீக்கும் சோமவார விரதம்

நாள் : கார்த்திகை மாத திங்கள் கிழமைகள், வாரந்தோறும் வரும் திங்கள் கிழமைகள்.
தெய்வம் : சிவபெருமான்

விரதமுறை : இரவு மட்டும் சாப்பிட வேண்டும். முடியாதவர்கள் மட்டும் காலையிலும் சாப்பிடலாம்.

பலன் : திருமணமாகாதவர்களுக்கு தகுந்த வாழ்க்கை துணை, திருமணமானவர்களுக்கு தகுந்த வாழ்க்கை

சிறப்பு தகவல் : கணவன், மனைவி இருவரும் இணைந்து சிவாலயம் சென்று வருவது மிகவும் நல்லது.

அருள்மிகு ஆகாச மாரியம்மன் திருக்கோயில்

கவுரவ குலத்தினர் என்னும் கவரைச் செட்டியார் வகுப்பைச் சார்ந்தவர்கள், பரம்பரை பரம்பரையாகக் கண்ணாடி வளையல்களை வியாபாரம் செய்து வந்தனர். அவர்களின் சொந்த ஊர் திருநறையூராக இருந்தாலும், குதிரையின் மேல் மல்லாரம் வைத்து வளையல் சாரங்களை ஏற்றிக்கொண்டு ஒவ்வொரு ஊராகச் சென்று வியாபாரம் செய்வது வழக்கம் ஆகும். ஒரு முறை வளையல் வியாபாரிகள் சமயபுரத்துக்கு வந்து அம்மனை வழிபட்டனர். வளையல்கள் கொண்ட சாரங்களைத் தெருத்தெருவாக எடுத்துச் சென்று விற்பனை செய்தனர். மாலை நேரம் முடிந்தது, இரவு வந்தது. அதனால் இரவு இங்கேயே தங்கிவிட்டு, மறுநாள் பக்கத்திலுள்ள ஊர்களுக்குச் செல்லலாம் என்று சமயபுரம் கோயிலின் அருகில் உள்ள ஒரு மண்டபத்தில் தன்னுடன் வந்த வளையல் வியாபாரிகளுடன் வயதான வளையல் வியாபாரி ஒருவர் தங்கினார். நல்ல உறக்கம். நடு இரவில் மண்டபத்தில் படுத்திருந்த வளையல் வியாபாரியான பெரியவரின் கனவில், இளம்பெண்ணாக வந்தாள் சமயபுரத்தாள். தாத்தா, எனக்கு வளையல்கள் போட்டு விடுகிறீர்களா? என்று கேட்டாள். தெய்வீகக் களைவீசும் அந்தப் பெண்ணைப் பார்த்ததும், உனக்கு இல்லாத வளையல்களா? எல்லாம் உனக்குத்தாம்மா இப்படி உட்கார் என்று தான் கொண்டு வந்திருந்த சிறிய ஜமுக்காளத்தை விரித்து, வளையல்களை அடுக்கி, வைத்திருந்த பெட்டியையும், வளையல் சாரம் கொண்ட மூட்டையையும் எடுத்து அந்தப் பெண்ணின் முன் வைத்தார். அந்தப் பெண் அமர்ந்து, வளையல் வியாபாரி அந்த அழகான கைகளுக்கு ஏற்ற வண்ணமயமான கண்ணாடி வளையல்களை ஒவ்வொன்றாகத் தேர்வுசெய்து, அந்தப் பெண்ணின் கைகளில் அணிய முற்படும்போது, வளையல்கள் உடைந்து கொண்டே வந்தன. இது அவருக்கு அதிசயமாகவும் திகைப்பாகவும் இருந்தது. அவர் எதிரில் அமர்ந்திருந்த பெண்ணோ, சிரித்துக்கொண்டே பெரியவரின் முகத்தைப் பார்த்தாள். பெரியவரோ, வளையல்களைஅந்தப் பெண்ணுக்கு அணிவிக்க முடியவில்லையே என்ற வருத்தத்தில் ஆழ்ந்திருந்தார். அம்மா, என்னவென்றே தெரியவில்லை! ஆத்தா என்னைச் சோதிக்கிறாள் என்று நினைக்கிறேன். நீ யார் அம்மா? என்று பெரியவர் பணிவுடன் கேட்டார். அந்தப் பெண் பதில் எதுவும் சொல்லாமல் அங்கிருந்து எழுந்து, கோயிலை நோக்கிச் சென்றாள். அவரோ, அந்தப் பெண் சென்ற திசையையே பார்த்துக்கொண்டிருந்தார்.
 கனவிலிருந்து விடுபட்டு திடுக்கெனக் கண்விழித்த பெரியவர், தான் கண்டது கனவா என்றவாறே, வளையல்களை அடுக்கி வைத்திருந்த பெட்டியையும், வளையல்கள் கொண்ட சாரத்தையும் உடனே பிரித்துப் பார்த்தார். என்ன ஆச்சரியம் ! அவர் விற்பனைக்காக கொண்டு வந்திருந்த அத்தனை வளையல்களும் உடைந்தது. இது சமயபுரத்தாளின் சோதனை என்பதை உணர்ந்த பெரியவர், கோயிலை நோக்கி கைகூப்பித் தொழுதார். காலை பொழுது விடிந்தது. மண்டபத்தில் அவருடன் இருந்த மற்ற வியாபாரிகள், எழுந்திருக்க முடியாமல் முணுமுணுத்துக் கொண்டிருந்தார்கள். அவர்களின் உடல் முழுவதும் அம்மை போட்டிருந்தது. என்ன செய்வது? ஆத்தா, இப்படிச் சோதித்துவிட்டாளே! ஆத்தா, நாங்க ஏதாவது தப்பு செய்திருந்தா எங்களை மன்னிச்சிடும்மா என்று கோயிலை நோக்கி சாஷ்டாங்கமாகத் தரையில் விழுந்து வணங்கினார் அந்தப் பெரியவர். அப்போது, கோயில் குருக்கள் திருநீறு, குங்குமம் கொண்ட பூஜைத்தட்டுடன் அவர்முன் நிற்பதைக் கண்டு ஆச்சரியப்பட்டார்.
 செட்டியாரே, கவலைப்படாதீர்கள்! விடியற்காலை ஆத்தா என் கனவில் வந்து, வளையல் வியாபாரியான பெரியவர் கொண்டுவந்திருந்த வளையல்களைப் போட்டுக்கொள்ள ஆசைப்பட்டு, என் கையை நீட்டும்போதெல்லாம் விளையாட்டாக வளையல்கள் உடையும்படி செய்துவிட்டேன். அந்த பெரியவர் மிகவும் பயந்துபோய் கவலையாக இருப்பார். நான் உடைத்த வளையல்களுக்குக் கிரயமாக, என் சன்னிதானத்தில் என் காலடியில் வைத்திருக்கும் பொற்காசுகளை அவருக்குக் கொடுத்துவிட வேண்டும் என்று கூறினாள். நான்தான் வந்தேன் என்பதை அவர் தெரிந்துகொள்ள, அவருடன் வந்திருக்கும் வியாபாரிகளின் உடலில் என் முத்திரையைப் பதித்து உள்ளேன். அவர்கள் ஏன் துன்பப்பட வேண்டும்? நீங்கள் பக்தர்களுக்கு அளிக்கும் பிரசாதமான குங்குமத்தையும், திருநீற்றையும் அவர்கள் உடலில் பூசி விட்டால் எல்லாம் சரியாகி விடும் என்று உத்தரவு வந்தது. அத்துடன், நீங்கள் இருக்கிற இடத்தையும், உங்களையும் எனக்கு அடையாளம் காண்பித்தாள் என்று சொன்ன குருக்கள், பொற்காசுகளைக் கொண்டு வந்து பெரியவரிடம் கொடுத்தார். அம்மை போட்டவர்களின் உடலில் திருநீறும், குங்குமமும் தௌpக்க, அம்மை முத்துக்கள் எல்லாம் மறைந்து, உடல்நலம் பெற்று அவர்கள் எழுந்தார்கள். அனைவரும் கோயிலுக்கு அருகில் உள்ள ஆற்றில் நீராடிவிட்டு, குருக்களுடன் கோயிலுக்குச் சென்று அம்மனை மனம் உருக தரிசனம் செய்தனர். ஆத்தா! எங்கிட்டே வளையல் போட ஆசையா கையை நீட்டினியே! என்னால் வளையல் போட்டுவிட முடியாமல் போய்விட்டதே என்று பிதற்றிக்கொண்டே அந்த வியாபாரி கோயிலைவிட்டு வெளியே வந்தார். அப்பொழுது, ஆகாயத்தில் சமயபுரத்தாள் தோன்றி எல்லோருக்கும் காட்சி தந்து அருளாசி வழங்கினாள்.

சிறப்பம்சங்கள்:
இங்கு சமயபுரத்தாள், திரு உருவம் இல்லாமல் எல்லை அம்மனாக எழுந்தருளி அருள்புரிவது சிறப்பாகும். 

மதுரை மீனாக்ஷி அம்மன் கோவில்

மூலவர்: சுந்தரேஸ்வரா், சொக்கநாதா், சோமசுந்தரா்.

அம்மன்/தாயாா்:மீனாக்ஷி, அங்கயற்கண்ணி.

தலவிருக்ஷம்: கடம்ப மரம்.

தீா்த்தம்:பொற்றாமரைக்குளம், வைகை, கிருதமாலை, தெப்பக்குளம், புறத்தொட்டி.

பழமை: 2000 — 3000 வருக்ஷங்களுக்கு முன்.

புராண பெயா்:ஆலவாய், கூடல், நான்மாடக்கூடல், கடம்பவனம்.

ஊர்:மதுரை, தமிழ்நாடு.

ஸ்தல சிறப்பு:

சுந்தரேஸ்வரருக்கு மேல் உள்ள விமானம் இந்திரனால் அமைக்கப்பட்டது. விருத்தாசூரனை கொன்றதற்குகாக., இந்திரன் தனக்கு நோ்ந்த கொலைப்பாவத்தை போக்க பல தலங்களுக்கு சென்று வந்தான். அப்படி வரும் போது சிவனின் திருவிளையாடலால் கடம்பவனமாகிய இந்த ஸ்தலத்தில் ஓா் அழகிய சுயம்புலிங்கத்தை கண்டு பூசித்து வழிபட., பாவம் நீங்கியது. எனவே இந்திர விமானத்துடன் கூடிய இந்த பெருங்கோயிலை கட்டினான் என்பாா்கள் எனவே இது இந்திர விமானம் என அழைக்கப்படுகிறது. இங்குள்ள மீனாக்ஷி அம்மன் சிலை முழுவதும் மரகதக்கல்லால் ஆனது. 18 சித்தா்களில் சுந்தரானந்த சித்தா் பீடம் இது. தமிழ்நாட்டில் மீனாக்ஷி சுந்தரேஸ்வரா் என்ற பெயருடைய 366 கோயில்களில் முதன்மையானது. இந்த ஸ்தலத்தினை பூலோக கைலாசம் என்றும், ஸ்தலத்தின் பெயரை படித்தாலோ, கேட்டாலோ முக்தி கிடைக்கும் என்றும் கூறுவாா்கள்.

பொற்றாமரைக்குளம்:

நந்தி மற்றும் பிற தேவா்களின் வேண்டுகோளின்படி சிவன் தமது சூலத்தால் பூமியில் ஊன்றி உண்டாக்கியதே இந்தக் குளம். கோயிலுக்குாிய தீா்த்தங்களில் முதன்மையானது. சிவகங்கை என்றும் கூறப்படுகிறது. இந்திரன் தான் பூஜிப்பதற்கு பொன் தாமரையைப் பெற்ற இடம். இந்தக்குளத்தில் அமாவாஸை, மாதப் பிறப்பு, கிரஹணகாலம், வியதிபாதம் ஆகிய புண்ணிய காலங்களில் நீராடி இறைவனைப் பூஜித்தால் வேண்டும் சித்திகளைப்பெறலாம் என்பது ஐதீகம். இக்குளத்தை சுற்றி சிவனின் 64 திருவிளையாடல்களும் சித்தாிக்கப்பட்டுள்ளன. திருக்குறளின் பெருமையை நிலை நாட்ட சங்கப்பலகை தோன்றிய இடம். இங்கு ஸ்படிக லிங்கம் அமைந்துள்ளது கூடுதல் சிறப்பு. விநாயகரின் அறுபடை வீடுகளில் இது நான்காவது படைவீடாகும். சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 192வது தேவாரத்தலம் ஆகும். அம்மனின் 51 சக்தி பீடங்களில் இது ராஜமாதங்கி சியாமள சக்தி பீடம் ஆகும்.

பொது தகவல்:

மீனாக்ஷி அங்கயற்கண்ணி :

இங்குள்ள அம்மனின் பெயர் மீனாக்ஷி. தமிழில் அங்கயற்கண்ணி. மீன் போன்ற விழிகளை உடையவள் என்பது பொருள். மீன் தனது குஞ்சுகளைத் தன் பார்வையினாலேயே தன் காப்பதைப்போல் அன்னை மீனாக்ஷி தன்னை தரிசிக்க வரும் அடியவர்களை தன் அருட்கண்ணால் நோக்கி மகிழ்விக்கிறாா்.

மீன் கண்ணுக்கு இமையில்லாமல் இரவும் பகலும் விழித்துக் கொண்டிருப்பது போல தேவியும் கண் இமையாமல் உயிர்களை எப்போதும் காத்து வருகிறாா். அன்னை மீனாக்ஷிக்கு பச்சைத்தேவி, தடாதகை மரகதவல்லி, கோமகள், அபிடேகவல்லி,  அபிராமவல்லி கயற்கண்குமாரி, கற்பூரவல்லி, குமரித்துறையவள், சுந்தரவல்லி., பாண்டிப்பிராட்டி, மதுராபுரித்தலைவி, மாணிக்கவல்லி, மும்முலைத் திருவழுமகள் போன்ற பெயர்களுடன் இன்னும் பல பெயர்களும் உள்ளன.

நடராஜா் கால் மாறி ஆடிய காரணம்:

மதுரையில் மீனாக்ஷி அம்மனுக்கும், சுந்தரேஸ்வரருக்கும் திருக்கல்யாணம் சிறப்பாக நடைபெறுகிறது. திருமணத்தில் தேவர்களும், முனிவா்களும் கலந்து கொண்டனா். அதில் பதஞ்சலி மகரிஷியும் வியாக்ரபாதரும் அடங்குவா். திருமணத்திற்கு வந்திருந்தவர்களை உணவு அருந்துவதற்காக சிவனும்., மீனாக்ஷியும் அழைத்தனா். அப்போது பதஞ்சலியும், வியாக்ரபாதரும் சிவனிடம், "இறைவா.! நாங்கள் இருவரும் தங்கள் பொன்னம்பல நடனத்தை பாா்த்த பின்தான் உணவு அருந்துவது வழக்கம்" என்றனா்

இதைக்கேட்ட இறைவன்., இவர்களின் நியமத்தை காக்கும்பொருட்டு மதுரை மீனாக்ஷியம்மன் கோயிலிலேயே திருநடனம் புரிந்து அருள்பாலிக்க வெள்ளியம்பலத்தை ஏற்படுத்துகிறாா். இந்த வெள்ளியம்பலத்தில் நடனமாடிய இறைவனின் திருநடனத்தை கண்ட பின் பதஞ்சலியும், வியாக்ரபாதரும் உணவு அருந்துகின்றனா்.

இந்த வெள்ளியம்பல நடராஜா் திருநடனம் புரியும் மதுரையை ஆண்ட விக்கிரம பாண்டியனின் மகன் ராஜசேகர பாண்டியன் என்பவன் ஆயகலைகள் 64ல் — 63 கலைகளில் தேர்ச்சி பெற்றிருந்தான். மீதி ஒரு கலை தான் நடனம்.  இந்த நடனமானது நடராஜப்பெருமான் ஆடிக்கொண்டிருப்பதால் நாம் எப்படி கற்பது என நினைத்தான்.

இதே காலத்தில் வாழ்ந்த கரிகாற்சோழன் என்ற மன்னன் 64 கலைகளையும் கற்றவன் என்ற விஷயத்தை ஒரு புலவன் பாண்டியனிடம் தெரிவித்தான். உடனே பாண்டியனும் நடனம் கற்று முழுமையாக தேர்ச்சியும் பெறுகிறான்.  இப்படி நடனம் கற்கும் போது உடம்பெல்லாம் வலிப்பதால் நடனக்கலை எவ்வளவு கஷ்டம் என்பதை உணர்கிறான்.  64 கலைகளையும் கற்ற திருப்தியில் மதுரை வெள்ளியம்பல நடராஜாிடம் ஆசீவாதம் வாங்க வருகிறான். அப்போது நடனம் கற்பதே கஷ்டமாக இருக்கும் போது காலம் காலமாக வலக்கால் ஊன்றி இடக்கால் தூக்கி நடனமாடிக் கொண்டிருக்கும் நடராஜருக்கு எவ்வளவு கஷ்டமாக இருக்கும் என நினைத்து மிகவும் வேதனைப்படுகிறான்.

இதை யாரிடம்., எப்படி கேட்பது. முன் காலங்களில் வாழ்ந்த தேவா்கள் முனிவா்கள் எல்லோரும் இதைப்பற்றி பேசாமல் இருக்கும்போது நாம் எப்படி சிவனிடம் கேட்பது என நினைத்து மிகவும் வருத்தப்பட்டான். இந்நிலையில் ஒரு சிவராத்திரி திருவிழா அன்று., மன்னன் நான்கு கால பூஜை முடித்து விட்டு., நடராஜாின் எதிரில் நின்று., "ஒரே காலில் ஆடிக்கொண்டிருக்கும் இறைவா.! எனக்காக கால் மாறி ஆடக்கூடாதா.?" என வருந்தி கேட்கிறான். "அப்படி நீ கால் மாறி ஆடா விட்டால் என் முன்னால் கத்தி வைத்து அதில் விழுந்து உயிர் துறப்பேன்" என இறைவனிடம் கண் மூடி மன்றாடுகிறான். சிறிது நேரம் கழித்து கண்விழித்து பாா்க்கிறான் ராஜசேகர பாண்டியன். அப்படியே மெய்சிலிர்த்து நின்று விடுகிறான். காரணம்., பக்தனுக்காக இடது கால் ஊன்றி வலது கால் தூக்கி ஆடுகின்றாா் நடராஜப்பெருமான். உடனே மன்னன் இறைவனை பலவாறாக பாடிதுதித்து மகிழ்ந்து ஆனந்தத்தில் அழுது விழுந்து தொழுது "எனக்காக கால் மாறி ஆடிய பெருமானே, இதே திருக்கோலத்தில் மதுரையிலேயே இருந்து வரும் பக்தா்களுக்கு தரிசனம் கொடுக்க வேண்டும்" என்ற வரமும் வாங்கி விடுகிறான். அன்றிலிருந்து தான் மதுரை வெள்ளியம்பல நடராஜர் கால் மாறி ஆடும் தரிசனம் கொடுக்கின்றாா்.

திருவிழா:

சித்திரை மாதம் நடக்கும் சித்திரைத் திருவிழாவின் போது மீனாக்ஷி திருக்கல்யாணம், பட்டாபிஷேகம், தோ் ஆகியவை மிகவும் புகழ்பெற்றவை. நவராத்திரி, ஆவணி மூல திருவிழா, தை மாதத்தில் தெப்பத் திருவிழா தை மாதம், ஆடிப்பூரம். இது தவிர மாதந்தோறும் திருவிழாக்கள் நடந்த வண்ணமாக இருக்கும். இவை தவிர பொங்கல், தீபாவளி, தமிழ் மற்றும் ஆங்கிலப் புத்தாண்டு தினங்கள்., விநாயகா் சதுா்த்தி ஆகிய முக்கிய விசேஷ தினங்களில் பக்தா்கள் கூட்டம் மிக அதிகமாக இருக்கும்.